
பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப்க்கு கொரோனா இருப்பது சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் வீட்டு தனிமையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தி சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகளில் கத்ரீனா கைஃப் ஒருவரான நடிகை கத்ரீனா கைஃப்பும் விக்கி கௌஷலும் திருமணம் செய்து கொள்ளப்போவதாக அண்மையில் தகவல்கள் வெளியானது.
அமிதாப் பச்சன், ஜாக்கி ஷெரப் பத்மலட்சுமி உட்பட பலர் நடித்த பூம் படத்தின் மூலம் பாலிவுட்டில் காலடி எடுத்து வைத்த இவர், தற்போது இந்தி சினிமாவில் கவர்ச்சிப்புயலாக உலா வருகிறார்.
ஹாங்காங்கில் பிறந்து வளர்ந்த கத்ரீனா, குழந்தையாக இருக்கும் போதே பல நாடுகளை சுற்றி வந்துள்ளார்.

பாலிவுட் கனவுக்கன்னி காத்ரினா கைஃப், ரேஸ், சிங் இஸ் கிங், பாடிகார்ட், அக்னிபாத், ஏக்தா டைகர், டைகர் ஜிந்தா ஹே உட்பட பல படங்களில் நடித்துள்ளார். பாலிவுட்டில் நம்பர் ஒன் நடிகைகளில் ஒருவராக வலம் வரும் இவர், சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆசையில் உள்ளார். இதனால், லண்டனில் பல நிறுவனங்களுக்கும் சென்று வந்துள்ளார்.
இந்நிலையில், பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்க்கு கொரோனா இருப்பது சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் வீட்டு தனிமையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Related
Source: Dhinasari News – Vellithirai News