ஏன் போடணும் ஓட்டு..? விவேக் வெளியிட்ட வீடியோ!

vivek
vivek

வாக்களிக்கச் செல்லும் போது முகக்கவசம் அணிந்து செல்லுங்கள் என்று நடிகர் விவேக் வலியுறுத்தியுள்ளார்.

தமிழக சட்ட மன்றத்தின் 234 தொகுதிகளுக்கும் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. கடந்த பல நாட்களாக அரசியல் கட்சிகளின் பரப்புரை, வாக்குறுதி என பலவற்றையும் மக்கள் கேட்ட நிலையில் நேற்றிரவு பிரச்சாரம் ஓய்ந்தது.

அந்த வகையில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெறுகிறது. சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க தமிழகம் முழுவதும் 88 ஆயிரத்து 936 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நடிகர் விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், “ஒவ்வொரு ஓட்டும் நமது உரிமை அதை நாம் விட்டு தரக்கூடாது. நம் ஒருவர் ஓட்டுப் போடவில்லை என்றால் என்ன மாற்றம் வந்துவிடப் போகிறது? அல்லது நாம் ஒருவர் ஓட்டு போட்டால் என்ன மாற்றம் வந்துவிடப் போகிறது? என்று நீங்கள் சிந்திக்கக்கூடாது .

அப்படி நினைப்பது ஜனநாயகத்திற்கு நாம் செய்யும் மிகப்பெரிய தீங்கு. ஒவ்வொரு ஆளுமையையும் தேர்ந்தெடுப்பது நமது விரல் மை .அதை நாம் மறந்துவிடக்கூடாது. அதுதான் ஜனநாயகத்தின் வலிமை . அதை நாம் எப்போதும் விட்டுக்கொடுக்க கூடாது .

அதனால் எல்லோரும் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களியுங்கள். வயதானவர்கள் தபால் மூலமாகவும் வாக்குகளை கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும்” என்று கூறியுள்ளார்.

அத்துடன் அந்த பதிவில் வாக்களிக்கச் செல்லும் போது முகக்கவசம், சமூக இடைவெளி மற்றும் வீட்டுக்குள் வந்ததும் சோப் தண்ணீரில் கை கழுவுதல் அவசியம் என்று நடிகர் விவேக் குறிப்பிட்டுள்ளார்.

Source: Dhinasari News – Vellithirai News

%d bloggers like this: