
சகோதரியின் ஆடையை கிழித்து மானபங்கம் செய்தவர்கள் மீதான வழக்கை வாபஸ் பெற, தன்னை அரை நிர்வாணப்படுத்தி வீடியோ எடுத்து சமூகவலைதளங்களில் பதிவிட்டுவிடுவதாக சிலர் மிரட்டுவதாக சின்னத்திரை துணை நடிகை சென்னை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
சன் டிவியில் வானத்தை போல எனும் டிவி தொடரில் சிட்டு என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ஜெனிபர் (24).
இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் செம்பருத்தி தொடரிலும் நடித்து வருகிறார்.
இவர் சரவணன் என்பவரை திருமணம் செய்தார். பிறகு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.
இந்த நிலையில் டிவி தொடர்களில் உதவி இயக்குநராக பணியாற்றி வரும் நவீன்குமார் என்பவருடன் ஜெனிபருக்கு பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து சரவணனை விவாகரத்து செய்த பிறகு 2ஆவதாக நவீன்குமாரை திருமணம் செய்யவிருந்தார் ஜெனிபர்.
இந்த நிலையில் நவீன்குமார் லட்சக்கணக்கில் பணம் கேட்டு மிரட்டியதால் அவருடன் பழகுவதை ஜெனிபர் தவிர்த்துவிட்டதாக தெரிகிறது.
இதையடுத்து கடந்த 18-ஆம் தேதி நவீன்குமார் அவரது பெற்றோர், நண்பர் கார்த்திக், அடையாளம் தெரியாத 3 பேர் , ஜெனிபரின் கார் கண்ணாடியை உடைத்தனர்.

மேலும் காரில் இருந்த அனைவரையும் அடித்து உதைத்துள்ளனர். தனது தந்தையை தாக்கியதோடு அவரின் தங்கையின் ஆடையை நவீன்குமார், கார்த்திக் ஆகியோர் கிழித்து மானபங்கம் செய்தார்கள் என ஜெனிபர் மணலி காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
இதுதொடர்பாக நவீன்குமார், அவரது பெற்றோர், நண்பர் கார்த்திக் ஆகியோர் மீது மணலி போலீஸார் பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த நிலையில் நடிகை ஜெனிபர் நேற்று சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
பிறகு செய்தியாளர்களை அவர் சந்தித்த போது கூறுகையில் நவீன்குமாருக்கு வேலை போனதால் செலவுக்காக தன்னிடம் இருந்து ரூ 2.5 லட்சம் வரை கடனாக வாங்கி கொண்டார்.
அது போல் மீண்டும் 5 லட்ச ரூபாயை கடனாக கேட்டார். இதை நான் கொடுத்த மறுத்தார். இதனால் என்னை அடித்து காரில் ஏற்றி கொண்டு அரை நிர்வாணப்படுத்தி செல்போனில் வீடியோ எடுத்தார். என தெரிவித்துள்ளார்.
Related
Source: Dhinasari News – Vellithirai News