
ரஜினி, விஜய், தனுஷ் ஆகிய முன்னணி நடிகர்களுடன் நடித்த மூத்த நடிகர் செல்லதுரை ஐயா காலமானார். அவருக்கு வயது 84.
கொரோனா தொற்று தொடங்கியதில் இருந்து தமிழ் திரையுலகில் பலரையும் இழந்துவிட்டோம். நோய் பாதிப்பு, நோய் பாதிக்காத என பலரும் உயிரிழந்துள்ளனர். கடந்த ஆண்டு எஸ்.பி.பி, இந்த ஆண்டு விவேக், தாமிரா, ஜனநாதன் உள்ளிட்ட பலருடன் தற்போது நடிகர் செல்லத்துரை ஐயா மறைந்துள்ளார்.
சென்னையில் வசித்து வந்த நிலையில் செல்லத்துரை ஐயா வயது மூப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். இவர் நடிகர் விஜய் உடன் கத்தி, தெறி, தனுஷின் மாரி, ரஜினிகாந்தின் சிவாஜி ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவை மட்டுமல்லாமல் பல்வேறு படங்களில் நடித்துக் கொண்டிருந்தார்.
இந்நிலையில் செல்லத்துரை ஐயா திடீரென உயிரிழந்ததை அடுத்து திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது உடல் இன்று நல்லடக்கம் செய்யப்படுகிறது.
Veteran actor #Chelladurai aiya passed away yesterday evening. Our deepest condolences to his family members 🙏#RIPChelladurai pic.twitter.com/sv3j0IOpIl
— Vijay Fans Trends ᵂᵉᵃʳ ᵃ ᴹᵃˢᵏ 😷 (@VijayFansTrends) April 30, 2021
Related
Source: Dhinasari News – Vellithirai News
Leave a Reply