
திரிஷா திருமணம் செய்துக்கொள்ள உள்ளதாக பிரபல நடிகை ஒருவர் சூசகமாக தெரிவித்துள்ளார்.
தமிழ் மற்றும் தெலுங்கில் பல வருடங்களாக கதாநாயகியாக நடித்து வருபவர் நடிகை திரிஷா. அனைத்து முன்னணி ஹீரோக்களோடும் இணைந்து நடித்துள்ள இவர், கடைசியாக ‘பேட்ட’ படத்தில் ரஜினியுடன் ஜோடியாக நடித்தது நல்ல வரவேற்பை பெற்றது.
தற்போது இவரின் கைவசம் ‘பொன்னியின் செல்வன்’ ‘கர்ஜனை’ ‘சதுரங்கவேட்டை 2’ ‘ராங்கி’, ‘சர்க்கரை’ ஆகிய படங்கள் உள்ளன.
கடந்த 14ம் தேதி ஒடிடியில் த்ரில்லர் படமாக வெளியான ‘பரமபத விளையாட்டு’ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதற்கிடையே திரிஷா நேற்று தனது 38வது பிறந்தநாளை எளிமையான முறையில் கேக் வெட்டி கொண்டாடினார். அவருக்கு திரையுலகினரும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிலையில் பிறந்தநாள் கொண்டாடிய த்ரிஷாவுக்கு நடிகை சார்மியும் வாழ்த்து தெரிவித்தார். சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள அந்த வாழ்த்து செய்தியில், த்ரிஷா பேச்சுலராக கொண்டாடும் கடைசி பிறந்தநாள் இதுவாகத்தான் இருக்கும் என்று பதிவிட்டிருந்தார்.
இதிலிருந்து திரிஷா விரைவில் திருமணம் செய்துக்கொள்ள இருப்பதை சூசகமாக சார்மி தெரிவித்துள்ளார் என்பதாக ரசிகர்கள் கூறிவருகிறார்கள்.
இந்த செய்தி சோஷியல் மீடியாவில் தீயாய் பரவி வருகிறது. ரசிகர்களும் இப்போதே திரிஷாவுக்கு வாழ்த்து சொல்ல ஆரம்பித்துவிட்டனர்.
இந்த தகவலை பதிவிட்ட நடிகை சார்மியும், த்ரிஷாவும் நீண்டகால தோழிகள் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
Related
Source: Dhinasari News – Vellithirai News