
முதலமைச்சரை நேரில் சென்று சந்தித்தார் நடிகர் ரஜினிகாந்த். பதவியேற்பின்போது படப்பிடிப்பில் இருந்ததால் தற்போது நேரில் சென்று, முதலமைச்சராகப் பதவி ஏற்றதற்கு வாழ்த்து கூறினார் நடிகர் ரஜினி காந்த்.
சென்னை தலைமைச் செயலகத்துகு வந்திருந்த நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் பேசிய போது, கொரோனாவை வெல்ல அரசு கூறும் வழிமுறைகளை அனைவரும் தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என்றும், தமிழக அரசின் கட்டுப்பாடுகளை மக்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்றும் கூறினார்.
மேலும், கட்டுப்பாடுகளை கடைபிடித்தால் தான் கொரோனாவை ஒழிக்க முடியும் என்று பொதுமக்களிடம் தாம் கேட்டுக் கொள்வதாகவும் கூறினார்.
பின்னர் முதலமைச்சரை நேரில் சந்தித்து, ரூ.50 லட்சம் கொரோனா கால நிவாரண நிதியாக வழங்கினார் ரஜினிகாந்த்!
Related
Source: Dhinasari News – Vellithirai News