
பிரபல பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷலுக்கு, அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.
அவருடைய மயக்கும் குரலுக்கு அனைத்து மொழிகளிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் கடந்த 2015-ம் ஆண்டு, தமது நீண்டநாள் காதலரான ஷிலாதித்யாவைத் திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில், சமீபத்தில், தாம் கர்ப்பமாக இருப்பதாக குறிப்பிட்டு, அழகிய புகைப்படம் ஒன்றையும் தமது சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்தார்.
இதையடுத்து ரசிகர்களும், பிரபலங்களும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் ஸ்ரேயா கோஷலுக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை தமது சமூக வலைத்தள பக்கத்தில் ஸ்ரேயா கோஷல் தெரிவித்துள்ளார்.
Related
Source: Dhinasari News – Vellithirai News