வைரமுத்து 100 கருப்பொருள்களில் 100 பாடல்களை நாட்படுதேறல் என்ற பெயரில் தயாரித்து வெளியிட்டு வருகிறார்.
வைரமுத்து மீதான மி டூ புகார்களுக்கு பின்னர் அவருக்கான திரைப்பாடல் எழுதும் வாய்ப்புகள் குறைந்து வருவதாக சொல்லப் படுகிறது.
அவரின் ஆஸ்தான இயக்குனர்களில் ஒருவரான மணிரத்னம் தன்னுடைய பொன்னியின் செல்வன் படத்தில் கூட வைரமுத்துவுக்கு வாய்ப்பளிக்கவில்லை என சொல்லப்படுகிறது.
இந்நிலையில் அவர் 100 கருப்பொருள்களில் 100 பாடல்களை தயாரித்து அவரே எழுதி வெளியிட்டு வருகிறார்.
அதில் சமீபத்தில் வெளியான என் காதலா என்ற பாடல் வயது முதிர்ந்த ஆண் ஒருவர் மேல் பதின் வயது பெண்ணுக்கு வரும் காதலை சொல்வதாக உருவாகியுள்ளது.
இந்த பாடலில் என்னை அறிந்தாலில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிய அனிகா நடித்துள்ளார். அந்த பாடலில் உள்ள சில இப்போது சர்ச்சைகளை எழுப்பியுள்ளன. இதையடுத்து பலரும் வைரமுத்துவுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அந்த பாடலின் வரிகள்
என் காதலா காதல் வயது பார்க்குமா?
நானும் சின்னக் கன்று என்று இன்று சிந்தை மாறுமா?
வயதால் நம் வாழ்வு முறியுமா?
வாய் முத்தம் வயது அறியுமா?
நிலா வெண்ணிலா வயதில் மூத்ததில்லையா
இருந்தும் நிலவு சொல்லி இளைய அல்லி மலர்வதில்லையா?
என்வாழ்வில் தந்தை இல்லையே!
தந்தைபோல் கணவன் வேண்டுமே! *
ஆணும் பெண்ணும் சேர்வது
ஆசைப் போக்கில் நேர்வது காதல்
நீதி என்பது காலம் தோறும் மாறுது
வெட்டுக்கிளியின் ரத்தமோ வெள்ளையாக உள்ளது
விதிகள் எழுதும் ஏட்டிலே விதிவிலக்கும் உள்ளது
ஆழி ரொம்ப மூத்தது
ஆறு ரொம்ப இளையது
ஆறு சென்று சேரும்போது யாரு கேள்வி கேட்பது? *
காதல் சிந்தும் மழையிலே
காலம் தேசம் அழியுதே
எங்கே சிந்தை அழியுதோ
காதல் அங்கே மலருதே!
அறிவழிந்து போனபின் வயது வந்து தோன்றுமா?
பொருள் அழிந்து போனபின் நிழல் கிடந்து வாழுமா?
அறமிருக்கும் வாழ்விலே முரணிருக்கும் என்பதால்
முரணிருக்கும் வாழ்விலும் அறமிருக்கும் இல்லையா?
மனதின் எண்ணங்கள் கவிதையாகியிருக்கும். அவர் மீதான பாலியல் குற்றச்சாட்டில் இருந்தே அது தெளிவான விஷயம். ஒரு கட்சியின் பலத்தால் பலவீனம் மறைக்கப்பட்டுள்ளது. என பரவலாக பேசப்படுகிறது.
தற்பொழுது பாலியல் குற்றச்சாட்டிற்கு பொங்கும் அந்த கட்சி சார்ந்தவர்கள் இவரை போன்ற உள்ளவர்க்கு ஏன் பொங்கவில்லை. பல கிறிஸ்தவ மிஸ்னரி பள்ளிகளுக்கு பொங்கவில்லை . பொங்குவது ஒரு சார்பாக இல்லாமல் எங்கேயும் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறை சம்பவங்களுக்கு பொங்கி நீதி கிடைக்க வழிவகுக்காத போது தான் சந்தேகமே தோன்றுகிறது. எனவும் மக்களின் கருத்தாக உள்ளது.