ரொம்ப போரடிக்குதுனு இப்படி பண்ணியிருக்காங்க.. வைரலான பிக்பாஸ் ஷிவானி!


shivani
shivani

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் மூலம் மிகவும் பிரபலமானவர் ஷிவானி நாராயணன். இதற்கு முன்னதாக அவர் பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம், இரட்டை ரோஜா ஆகிய சீரியல்களில் ஹீரோயினாக நடித்தார். சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஷிவானிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

இவர் தினமும் இன்ஸ்டாகிராமில் (Instagram) அழகழகான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார். ஷிவானி நாராயணன் (Shivani Narayanan) தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு, தொடர்ந்து சமூக ஊடகங்களில் தொடர்ந்து கவர்ச்சியான விதவிதமான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அதோடு நடன வீடியோக்களையும் அவ்வப்போது பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது, நடிகை ஷிவானி, ரீமிக்ஸ் பாடலுக்கு குத்தாட்டம் போட்ட ரீல்ஸ் வீடியோவை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்த வீடியோ குறித்து ஷிவானி குறிப்பிடுகையில், “லாக்டவுன்ல ரொம்ப போரடிக்குது. சரி நாமளும் ஒரு ரீல்ஸ்ச போடுவோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஷிவானி வெளியிட்டுள்ள இந்த வீடியோ சமூக ஊடகங்களி வைரலாகி வருகிறது. வைரலாகி வரும் இந்த ரீல்ஸ் வீடியோவை, ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்துள்ளதாக ஷிவானி தெரிவித்துள்ளார்.

Source: Dhinasari News – Vellithirai News

Leave a Reply