இனிமேல் அந்த மாதிரி நடிக்க மாட்டேன் – நடிகர் சோனூ சூட் அதிரடி அறிவிப்பு

sonu sood

தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் வில்லனாக நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர் சோனு சூட். கொரோனா ஊரடங்கின் போது புலம் பெயர்ந்த மக்களை சொந்த ஊருக்கு தனது சொந்த செலவில் அனுப்பி வைப்பது, சமூக வலைத்தளங்களின் பலரின் பிரச்சனைகளையும் கேட்டு அவர்களுக்கு உதவி செய்வது என மக்களை கவர்ந்தார்.

அதாவது சினிமாவில் வில்லனாக நடிக்கும் அவர், நிஜ வாழ்வில் ஹீரோவாக மாறி மக்களின் மனதில் இடம் பிடித்தார். பலரை அவரை கடவுள் போல் தங்களின் வீட்டில் அவரின் புகைப்படங்களை வைத்து வணங்க துவங்கிவிட்டனர்.

இவரை பிரதமர் முதல் பலரும் பாராட்டியிருந்தனர். மக்களுக்கு உதவுவதற்காக தனது சொத்துக்களை ரூ.10 கோடிக்கு வங்கிகளில் அவர் அடமானம் வைத்ததும் தெரிய வந்தது.

இந்நிலையில், இனிமேல் வில்லனாக நடிக்க மாட்டேன் எனவும், நல்ல கதாபாத்திரங்களில் மட்டுமே நடிப்பேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மக்களிடையே அதிகம் பிரபலமாகி விட்டதால் அவருக்கு சினிமா வாய்ப்புகள் குவிந்து வருகிறது.