
நடிகை ப்ரணிதா சுபாஷ் திடீர் திருமணம் செய்துக கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.
2011-ஆம் ஆண்டில் ‘உதயன்’ திரைப்பட்டத்தின் மூலம் அருள்நிதிக்கு கதாநாயகியாக தமிழ் திரையுலகில் அறிமுகவானவர் ப்ரணிதா சுபாஷ். அதன்பிறகு கார்த்தி, சூர்யாவுடன் கதாநாயகியாக திரைப்படங்களில் தோன்றினார். பின்னர் தெலுங்கு திரையுலகிலும் கால் பதித்து கதாநாயகியாக வலம் வந்தார்.

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த இவரின் திருமணம் நேற்று நடந்தேறியுள்ளது. ப்ரணிதாவிற்கும் பெங்களூருவைச் சேர்ந்த நிதின் ராஜு என்பவருக்கும் நேற்று நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றுள்ளது.
சமூக வலைத்தளங்களில் அந்தத் திருமணப் புகைப்படங்கள் வெளிவந்த பிறகுதான் அவர்களுக்கு திருமணம் நடைபெற்ற விஷயம் வெளியில் தெரிந்துள்ளது. அதன் பிறகு தனது டிவிட்டர் பதிவில் திருமணம் பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் ப்ரணிதா சுபாஷ்.
🧿✨🙏🏻 pic.twitter.com/ooLJMY9msr
— Pranitha Subhash (@pranitasubhash) May 31, 2021
Related
Source: Dhinasari News – Vellithirai News
Leave a Reply