செய்திகள்
ரஜினியுடன் அதிமுக கூட்டணி – துணை முதல்வர் ஓபிஎஸ் அதிரடி பேட்டி

பல வருட தாமதங்களை தாண்டி நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்துள்ளார். தனது டிவிட்டர் பக்கத்தில் ‘ஜனவரியில் கட்சித் துவக்கம், டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு.
#மாத்துவோம்_எல்லாத்தையும்_மாத்துவோம்
#இப்போ_இல்லேன்னா_எப்பவும்_இல்ல ’ என டிவிட் செய்துள்ளார்.
மேலும், ‘வரப்போகிற சட்டமன்ற தேர்தலில் மக்களுடைய பேராதரவுடன் வெற்றி பெற்று தமிழகத்தில் நேர்மையான நாணயமான வெளிப்படையான ஊழலற்ற, ஜாதி மதச் சார்பற்ற ஆன்மிக அரசியல் உருவாகுவது நிச்சயம். அற்புதம்.. அதிசயம்..நிகழும்’ என குறிப்பிட்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து அவரின் அரசியல் வருகைக்கு அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், ரஜினியின் அரசியல் வருகை பற்றி துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் கூறிய ஓ.பி.எஸ் ‘ரஜினியின் அரசியல் வரவு, நல்வரவாகட்டும்’ என தெரிவித்தார். தேர்தலில் ரஜினியுடன் அதிமுக கூட்டணி அமைக்குமா என செய்தியாளர்கள் கேட்க ‘எதிர்காலத்தில் அரசியலில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். வாய்ப்பு இருந்தால் ரஜினி – அதிமுக கூட்டணி அமைய வாய்ப்பிருக்கிறது. அதேநேரம், ரஜினி கட்சி துவங்குவதால் அதிமுக வாக்கு வங்கியில் பாதிப்பு இருக்காது எனவும் அவர் தெரிவித்தார்.