தனக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக இயக்குனர் முதல் இன்ஸ்பெக்டர்வரை 14 பேர்களின் பெயரை வெளியிட்டுள்ளார் நடிகை ரேவதி சம்பத்.
இந்தியாவில் அதிலும் தென்னிந்தியாவில் Metoo இரண்டாம் அலை வீச ஆரம்பித்துள்ளது. பத்ம சேஷாத்திரி பள்ளி ஆசிரியர் தொடக்கி வைத்த இந்த அலையில் மானாவரியாக மானஸ்தர்கள் சிக்குகிறார்கள்.
மலையாள நடிகையும், சமூக ஆர்வலருமான ரேவதி சம்பத் தனக்கு உடல்ரீதியாக, உணர்வுரீதியாக, மனரீதியாக துன்புறுத்தியவர்கள் என 14 பெயர்கள் அடங்கிய பட்டியலை வெளியிட்டுள்ளார்.
இதில் பிரபல மலையாள நடிகர் சித்திக்கும் இடம்பெற்றிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பட்டியல்….
- ராஜேஷ் தொச்சிவர் (இயக்குனர்)
- சித்திக் (நடிகர்)
- ஆஷிக் மஹி (ஒளிப்பதிவாளர்)
- சிஜூ (நடிகர்)
- அம்ஹில் தேவ் (கேரள பேஷன் லீக் நிறுவனர்)
- அஜய் பிரபாகர் (டாக்டர்)
- எம்.எஸ்.பதுஷ்
- சவுரப் கிருஷ்ணன்
- நந்து அசோகன்
- மேக்ஸ்வெல் ஜோஸ் (குறும்பட இயக்குனர்)
- ஷனூப் கர்வத் (விளம்பரப்பட இயக்குனர்)
- ரஹீந்த் பாய் (காஸ்டிங் இயக்குனர்)
- சருன் லியோ (வங்கி ஏஜென்ட்)
- பினு (இன்ஸ்பெக்டர்)
இந்தப் பட்டியலில் உள்ள நந்து அசோகனும், எம்.எஸ்.பதுஹும் என்னை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என ரேவதி சம்பத் குற்றம்சாட்டியுள்ளார்.
சவுரப் கிருஷ்ணன் இணையத்தில் தன்னை கேலி செய்ததாக குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் சித்திக் மீது 2016-ல் ரேவதி சம்பத் பாலியல் குற்றச்சாட்டை வைத்திருந்தார். இப்போதுள்ள பட்டியலிலும் அவர் இடம்பிடித்துள்ளார்.
ரேவதி சம்பத் குற்றம்சாட்டியிருக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒரு தரப்பும், இது வெறும் பப்ளிசிட்டி ஸ்டன்ட் என வேறொரு தரப்பும் விமர்சனம் செய்து வருகிறது.