துவக்கக் காலத்தில் நானும் பாலியல் ரீதியிலான விஷயங்களை எதிர்கொண்டதாக’ தமிழ்ச் சினிமாவின் தற்போதைய பிரபல நடிகைகளில் ஒருவரான ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியிருக்கிறார்.
இது குறித்து அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், ‘ஆரம்பத்தில், என்னுடைய எளிமையான தோற்றத்தையும், உடையையும் பார்த்து பல இயக்குநர்கள் நிராகரித்தார்கள். அவர்களில் என் நிறம் பற்றி விமர்சித்தவர்களும் உண்டு.
‘கதாநாயகியாக ஒரு வாய்ப்பு கொடுங்கள். என்னை நிரூபித்துக் காட்டுகிறேன்’ என்று கேட்டபோது, ‘நீ ஹீரோயின் மெட்டீரியல் இல்லையேம்மா’ என்று சொல்லிச் சொல்லியே என்னை ஒதுக்கினார்கள்.
இதனால் அடுத்த 3, 4 வருடங்கள் எனக்குச் சுத்தமாக பட வாய்ப்புகளே இல்லை. இதற்கிடையில் போகும் இடமெல்லாம் நான் எதிர்கொண்ட பாலியல் ரீதியிலான அணுகுமுறைகளை என்னுடைய தைரியத்தால் சுட்டெரித்தேன்.
நடைமுறை வாழ்க்கை எனக்குத் தந்த வலி, என்னை முடக்கியது. இருந்தாலும் எனக்கு நானே ஆறுதல் கூறிக் கொண்டு மனதளவில் என்னை நானே உயர்த்திக் கொண்டு சினிமாவில் கதாநாயகி வாய்ப்புக்காக தொடர்ந்து முயற்சித்தேன்.
‘அட்டக்கத்தி’ படத்தில் ‘அமுதா’ என்ற சிறிய கதாபாத்திரத்தில் நடித்தேன். அதிலேயே ரசிகர்களால் கவனிக்கப்பட்டேன். பிறகுதான் ‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘ரம்மி’, ‘திருடன் போலீஸ்’ என்று வரிசையாக கதாநாயகி வாய்ப்புகள் எனக்குக் கிடைத்தன..!’ என்று சொல்லியிருக்கிறார்.