[prisna-google-website-translator]

‘மக்கள் மன்றம்’ மீண்டும் ‘ரசிகர் மன்றம்’ ஆனது: ரஜினி அறிவிப்பு!

rajini announctment - 1

எம்.ஜி.ஆர். , இருந்த வரை தமிழகத்தில் மீண்டும் வெற்றி பெற முடியாமல் இருந்து, எம்.ஜி.ஆர்., காலத்துக்குப் பின்னர் அதிமுக., இரண்டாக உடைந்த போது, 89இல் ஆட்சிக்கு வந்த கருணாநிதி, ஆட்சி கலைக்கப் பட்ட பின்னர் மீண்டும் ஆட்சிக்கு வர இயலாமல் ஜெயலலிதாவிடம் படுதோல்வியைச் சந்தித்த கருணாநிதி, 96இல் மீண்டும் முதல்வர் ஆவதற்காகக் குரல் கொடுத்து திமுக.,வை அரியணையில் ஏற்றியவர் ரஜினிகாந்த்.

பின்னர் 2006இல் காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சிகள் தயவில் வென்ற திமுக.,வை மைனாரிட்டி ஆட்சி என்று வர்ணித்தார் ஜெயலலிதா. தொடர்ந்து 2011, 2016 தேர்தல்களில் தோற்று திமுக., வீழ்ச்சியை சந்தித்த போது, திமுக.,வின் எழுச்சிக்காக ஆன்மிக அரசியல் என்ற எதிர்ப்பு மாயையை உருவாக்கி மீண்டும் திமுக.,வின் ஸ்டாலின் முதல்வர் ஆவதற்கு களம் ஏற்படுத்திக் கொடுத்தார் நடிகர் ரஜினிகாந்த்.

rajini gives money to cm fund
rajini gives money to cm fund

தொடர்ந்து 2024 தேர்தலிலும் உதயநிதிக்கு களம் ஏற்படுத்திக் கொடுப்பார் என்ற நம்பிக்கை திமுக.,வினரிடம் இருந்த நிலையில், இன்று தனது மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்திப்பதாக அறிவித்திருந்தார் நடிகர் ரஜினி காந்த்.

நான் எதிர்காலத்தில் அரசியலுக்கு வரபோகிறேனா? இல்லையா என்று பல கேள்விகள் உள்ளன என்று குறிப்பிட்ட நடிகர் ரஜினிகாந்த், தாம் மக்கள் மன்ற நிர்வாகிகளிடம் கருத்து கேட்ட பிறகு அரசியல் குறித்த முடிவு எடுப்பதாகவும், மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசித்து விட்டு எதிர்கால அரசியல் குறித்து அறிவிக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

இந்நிலையில் இன்று காலை மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் பேசிய ரஜினி காந்த், “நான் அரசியலுக்கு வருவேனா?” என்பது குறித்த கேள்வி இருப்பதாகவும், தமக்கு அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை என்றும் குறிப்பிட்டவர், ரஜினி மக்கள் மன்றம் கலைக்கப் படுவதாகவும் கூறினார்.

எதிர்காலத்தில் அரசியலில் ஈடுபடும் எண்ணம் எனக்கு இல்லை என்று குறிப்பிட்ட அவர், மக்கள் மன்ற பணிகளை தொடர்ந்து செயல்படுத்த முடியவில்லை என பல நிர்வாகிகள் தெரிவித்ததாக தகவல் வந்ததாகவும், மக்கள் மன்ற பொறுப்பாளர்கள் சிலர் பதவியில் இருந்து விலகியதாக சமூக வலைதளங்களில் பதிவு செய்ததாகவும் குறிப்பிட்டவர், மக்கள் மன்றத்தை மீண்டும் ரசிகர் மன்றமாக மாற்றி முந்தைய மக்கள் நலப் பணிகளிலான செயல்பாடுகளுடன் நிறுத்திக் கொள்வதாகவும் கூறினார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:

rajini statement - 2

ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கும் உறுப்பினர்களுக்கும் என்னை வாழ வைத்த தெய்வங்களான ரசிக பெருமக்களுக்கும் வணக்கம்.

நான் அரசியலுக்கு வர முடியவில்லை என்று சொன்ன பிறகு ரஜினி மக்கள் மன்றத்தின் பணி என்ன? நிலை என்ன என்று மக்கள் மன்ற நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் கேள்விக்குறியாக இருக்கிறது. அதை விளக்க வேண்டியது என்னுடைய கடமை.

நான் அரசியல் கட்சி ஆரம்பித்து அரசியலில் ஈடுபட ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றத்தை ரஜினி மக்கள் மன்றம் ஆக மாற்றி மாநில அளவிலும் மாவட்ட அளவிலும் பல பதவிகளையும் பல சார்பு அணிகளையும் உருவாக்கினோம். காலச் சூழலால் நாம் நினைத்தது சாத்தியப்படவில்லை. வருங்காலத்தில் அரசியலில் ஈடுபடப் போகும் எண்ணம் எனக்கில்லை.

ஆகையால் ரஜினி மக்கள் மன்றத்தை கலைத்து விட்டு சார்பு அணிகள் எதுவுமின்றி இப்போதைக்கு ரஜினி மக்கள் மன்றத்தில் உள்ள செயலாளர்கள் இணை துணை செயலாளர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களுடன் மக்கள் நலப் பணிக்காக முன்புபோல ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றமாக செயல்படும் என்று அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

வாழ்க தமிழ் மக்கள் … வளர்க தமிழ் நாடு … ஜெய்ஹிந்த்

அன்புடன்
ரஜினிகாந்த்

அடுத்து தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல்கள் வர உள்ளன. தற்போதைய அரசியல் சூழலில் ஆளும் திமுகவுக்கு மாற்றாக பாஜக உருவெடுத்துள்ளது. ஏற்கெனவே பாஜக முன்வைத்த ஆன்மீக அரசியல் என்ற கோஷத்தை தாமும் முன்னெடுத்து மக்களை ஒரு பக்கம் திரட்டி அப்படியே திமுகவுக்கு திசை திருப்பிவிட்ட ரஜினிகாந்த், அடுத்து உள்ளாட்சித் தேர்தலிலும் அதே பணியை செய்ய வேண்டியுள்ளது.

இந்த நிலையில் பாஜக.,வுக்கு மாநிலத் தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டிருக்கிறார். இளைஞர்களின் ஈர்ப்பு அண்ணாமலை பக்கம் இருக்கும் சூழலில், தமிழகத்தில் பாஜக.,வை மேலும் வளர விடாமல் செய்ய ரஜினியின் உதவி திமுக.,வுக்கு தேவைப்படுகிறது!

எனவே தாம் அரசியலுக்கு வரும் கேள்வி இன்னமும் அப்படியே இருக்கிறது என்று தெரிவித்துள்ள ரஜினி, தமது மன்றத்தின் நிர்வாகிகளுடன் ஆலோசித்து அடுத்த கட்ட அரசியல் குறித்து முடிவு எடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

Source: Dhinasari News – Vellithirai News

Leave a Reply