எப்பவோ ஆனாலும் இப்பவும் வைரல்தான்! ‘தல’ ஆச்சே!

தமிழ் சினிமா துவங்கிய காலத்திலிருந்தே ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏதாவது ஒரு நடிகர் கொண்டாடப்படுவது இங்கு இயல்பே. ஆனால் ஒருவர் மட்டும் தன்னைச் சுற்றி நடக்கும் கொண்டாட்டங்களை கண்டுகொள்ளாமல் தன் பணியையும், தன் கடமையையும் மட்டுமே செய்து கொண்டிருக்கிறார் என்றால் அது தான் அவருக்கான அடையாளம்.

சினிமாவை ரசிக்கும் ஒவ்வொருவரும் இவரை ரசிக்கிறார்கள். அழுக்குச் சட்டை போட்டாலும் அழகாய் தெரியும் ஆணழகன் என கொண்டாடுகிறார்கள். எத்தனை கொண்டாடினாலும் அதற்கான தலைகணம் எப்போதும் இவரிடம் இருந்ததில்லை. அவர்தான் தமிழ் சினிமா தலை மேல் வைத்து கொண்டாடும் ‘தல’அஜித்.

வெளியிடங்களில் தலைகாட்டுவதில்லை, பட விழாக்களுக்கு வருவதில்லை, சோஷியல் மீடியாவுக்கு நோ என தான் உண்டு தன் வேலை உண்டு என பயணித்தாலும் அவ்வப்போது இந்திய அளவில் அடிக்கடி வைரலாவார் அஜித்.

திரைப்பட நடிகர் மட்டுமல்லாமல், புகைப்படக்கலைஞர், துப்பாக்கிச் சுடுதல், கார் ரேஸ், பைக் ரேஸ், சைக்கிள் ரைடு, பைக் ரைடு, ட்ரோன் தொழில்நுட்பத்தில் ஆர்வம் என தனக்கு பிடித்ததை ஆர்வமுடன் செய்வதில் அஜித்துக்கு நிகர் அவரே. அவர் தொடர்பாக புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி ட்ரெண்டாவதும் உண்டு. அந்த வகையில் தற்போது அஜித்தின் பைக் ரைடு புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

BMW பைக்கில் வட இந்திய சாலைகளில் பைக் ரைடு செய்துள்ளார் அஜித். அஜித் பைக் ரைடு செய்த இடம் சிக்கிம் எனவும் கூறப்படுகிறது.

அது தொடர்பாக சில புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இது சமீபத்தில் எடுக்கப்பட்டதா என்று தெளிவான விவரம் தெரியவில்லை என்றாலும் ரசிகர்களின் பார்வைக்கு இந்த புகைப்படம் புதிது என்பதால் அவற்றை தல ரசிகர்கள் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

Source: Dhinasari News – Vellithirai News

Leave a Reply