[prisna-google-website-translator]

தனித்தீவில் மிரட்டி நிர்வாண ஷூட்டிங்! நடிகைகள் புகார்!

shilpa husb - 1

பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரான ராஜ் குந்த்ரா இளம் பெண்களுக்கு சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறி அவர்களை பயன்படுத்தி ஆபாச படம் உருவாக்கி, அதனை மொபைல் செயலியில் வெளியிட்டதற்காக கடந்த சில தினங்களுக்கு முன்னர் மும்பை போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

ராஜ் குந்த்ரா கைதுக்குப் பிறகு பல மாடல் அழகிகளும், நடிகைகளும் தாங்களும் ராஜ் குந்த்ராவால் பாதிக்கப்பட்டுள்ளதாக போலீஸீல் புகார் அளித்துள்ளனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இதில் முதன்மையானவர் நடிகை ஷெர்லின் சோப்ரா. இவர்தான் கடந்த ஏப்ரல் மாதம் ராஜ் குந்த்ரா மீது போலீஸில் பாலியல் புகார் அளித்திருந்தார்.

இவர் கடந்த 27-ம் தேதியன்று மும்பை குற்றப் பிரிவு போலீஸாரால் விசாரிக்கப்பட்டார். அப்போது ராஜ் குந்த்ராவால் தான் எந்த அளவுக்குப் பாதிக்கப்பட்டேன் என்பதை வாக்குமூலமாக அளித்திருக்கிறார் நடிகை ஷெர்லின் சோப்ரா.

நடிகை ஷெர்லின் சோப்ரா தன்னுடைய வாக்குமூலத்தில் ‘2019-ம் ஆண்டு ராஜ் குந்த்ரா என் மேனேஜரை தொடர்பு கொண்டு ஒரு ப்ராஜெக்ட் குறித்து என்னுடன் பேச வேண்டும் என்று கேட்டார். இதற்குப் பின்பு 2019 மார்ச் 27-ம் தேதியன்று எங்கள் இருவருக்குமிடையே பிசினஸ் மீட்டிங் நடந்து முடிந்தது.

அதன் பிறகு ஒரு நாள் திடீரென்று முன்னறிவிப்பு எதுவுமின்றி ராஜ் குந்த்ரா என் வீட்டிற்கு வந்தார். அவருடன் நான் மெசேஜ் மூலம் பேசும்போது ஏற்பட்ட வாக்குவாதத்தினால் என்னை சமாதானப்படுத்துவதற்கா வந்ததாகச் சொன்னார்.

அப்போது திடீரென்று நான் தடுத்தும் கேட்காமல் என்னை முத்தமிடத் துவங்கினார் ராஜ் குந்த்ரா. ‘திருமணமான நபருடன் நான் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ள விரும்பவில்லை. உங்கள் மனைவி ஷில்பா ஷெட்டி என்னாச்சு..?’ என்று நான் ராஜ் குந்த்ராவிடம் கேட்டேன்.

அதற்கு அவரோ, ‘அது சிக்கலானது. நான் வீட்டில் இருக்கும் நேரம் எல்லாம் ஒரே ஸ்ட்ரெஸ்தான்.’ என்றார். பயமாக இருக்கிறது.. நிறுத்துங்கள் என்று நான் மீண்டும் மீண்டும் கூறியும் ராஜ் கேட்கவில்லை.

கடைசியில் அவரிடம் இருந்து இருந்து தப்பித்து பாத்ரூமுக்குள் சென்று கதவை பூட்டிக் கொண்டேன். அவர் கிளம்பும்வரை வெளியே வரவில்லை.’ என்று ஷெர்லின் சோப்ரா புகார் கூறியுள்ளார்.

sherlin - 2

ஷெர்லின் சோப்ராவின் இந்தப் புகாரையடுத்து ராஜ் குந்த்ரா மீது 2021 ஏப்ரல் மாதம் பாலியல் தாக்குதல் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

ராஜ் குந்த்ரா மீது இந்தியன் பீனல் கோட் 376, மற்றும் 384, 415, 420, 504 and 506, 354 (a) (b) (d), 509, ஐடி ஆக்ட் சட்டம் 67, 67 (A), sec 3 & 4 மற்றும் பெண்களிடம் அநாகரிகமாக நடந்து கொள்வது என்ற பல சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த ஆபாசப் பட வழக்கிலும் ஷெர்லின் சோப்ராதான் முதலில் போலீஸில் புகார் அளித்து, வாக்குமூலத்தையும் பதிவு செய்திருக்கிறார்.

ராஜ்குந்த்ரா நடத்தி வரும் Armsprime என்ற ஆபாசப் பட செயலி பற்றியும் ஷெர்லின் சோப்ராதான் காவல்துறையிடம் புகார் கூறியுள்ளார்.

இந்நிலையில் ராஜ் குந்த்ராவின்
ஆபாச படங்களில் நடித்த நடிகைகள் போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளனர். தங்களை மிரட்டி போலீசில் சிக்க வைத்துவிடுவதாக கூறி கட்டாயப்படுத்தி, ஆபாச படங்களில் நடிக்க வைத்ததாக போலீசில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா காலத்தில் பட வாய்ப்புக்கள் இல்லாமல் இருந்ததாகவும், அந்த நேரத்தில் வெப் தொடர்களில் நடிக்க வாய்ப்பு கொடுப்பதாக நடிகை கெஹானா தெரிவித்ததால் அவருடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாகவும், அதனை பயன்படுத்தி தங்களை ஆபாச படங்களில் நடிக்க வைத்துவிட்டதாகவும் போலீசாரிடம் இரண்டு நடிகைகள் வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.

இது தொடர்பாக 25 வயது நடிகை ஒருவர் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது, ‘நான் இந்தி, மராத்தி, போஜ்புரி படங்களில் சிறிய வேடங்களில் நடித்து வந்தேன்.

ரவுனக் என்ற இயக்குநர் மூலம் சில வாய்ப்புக்கள் கிடைத்தன. பிப்ரவரி 4ம் தேதி அவரும் வேறு ஒரு பெண்ணும் என்னை சந்தித்தனர். அப்பெண்ணை இயக்குநர் என்று அறிமுகம் செய்து வைத்தனர். அவர்கள் என்னை மலாடு மத் தீவிற்கு அழைத்து சென்று சிங்கிள் மதர் என்ற குறும்படத்தில் நடிக்க வேண்டும் என்று கூறி கதையை என்னிடம் கொடுத்தனர்.

நான் நடிக்க தயாரான போது இந்த கேரக்டருக்கு நீங்கள் ஒத்து வரமாட்டீர்கள் என்று கூறி வேறு ஒரு கதையை கொடுத்தனர். அதை படித்து பார்த்துவிட்டு அதிர்ச்சியாகி அதில் நடிக்க முடியாது என்று சொன்னேன்.

ஆனால், பணம் வேண்டும் என்றால் இதில் நடித்தே ஆக வேண்டும் என்றும், இது எந்த சேனலிலும் ஒளிபரப்பு செய்யப்படாது என்றும், எனது தோற்றம் மற்றும் பெயரை மாற்றிவிடுவோம் என்றும் தெரிவித்தனர். நானும் அதில் நடித்தேன். ஆனால், முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்தவுடன் நிர்வாணமாக நடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

அதற்கு மறுத்தேன். உடனே இப்படத்திற்காக நாங்கள் அதிக அளவு செலவு செய்துவிட்டோம் என்றும், இதில் நடிக்கவில்லை என்றால் அதற்கு ஆன செலவை என்னிடமிருந்து வசூலிப்போம் என்று மிரட்டினர்.

இதனால் வேறு வழியின்றி அரை நிர்வாணத்துடன் நடிக்க சம்மதித்து, நடித்த போது போலீசார் வந்துவிட்டனர்’. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதே போன்று 20 வயதாகும் புதிய நடிகை ஒருவர் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது, ‘கொரோனா காலத்தில் பட வாய்ப்பு இல்லாமல் இருந்தேன்.

அப்போது பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் நடிக்க ஆட்கள் தேவை என்று விளம்பரம் வந்தது. அதனை தொடர்பு கொண்டபோது வெப் தொடரில் நடிக்க வாய்ப்பு கொடுப்பதாகக் கூறினர்.

அவர்கள் என்னை மலாடு மத் தீவிற்கு அழைத்து சென்று ராஜா, ராணி தொடர்பான கதை என்று கூறினர். ஆனால் சில காட்சிகள் படப்பிடிப்பு நடத்திய பிறகு ஆபாசமாக நடிக்கும் படி கேட்டுக்கொண்டனர்.

நான் மறுத்த போது இந்த படப்பிடிப்புக்கு 10 லட்சம் செலவாகி இருப்பதாகவும், அந்தப் பணத்தை என்னிடம் வசூலிக்க இருப்பதாக நடிகை கெஹானா மிரட்டினார்.

இதனால் வேறு வழியில்லாமல் நடிக்க வேண்டியதாகிவிட்டது” என்று தெரிவித்தார். இதில் நடிக்க அவருக்கு ரூ.10 ஆயிரம் கொடுத்துள்ளனர். இது போன்று 100 ஆபாச குறும்படங்களை தயாரித்து மொபைல் ஆப்களில் பதிவேற்றம் செய்துள்ளனர் என்று போலீசார் தெரிவித்தனர்.

நடிகை கெஹானா எடுத்த இந்த ஆபாச படங்கள் ராஜ் குந்த்ராவின் நிறுவனத்துக்கு கொடுக்கப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த ஆபாசப் பட வழக்கில் ராஜ் குந்த்ரா மீது இந்திய அரசியல் சட்டப் பிரிவின் ஏமாற்றுதல், அநாகரிகமான விளம்பரங்களைத் தயாரித்தல், வெளியிடுதல், பொது வெளி மற்றும் இணையத்தில் பெண்களை அவமானப்படுத்ததுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Source: Dhinasari News – Vellithirai News

Leave a Reply