
மாயமுகி என்ற திரைப்படத்தை ரவிச்சந்திரன் என்பவர் இயக்குவதாகவும் அதை காஞ்சிபுரத்தைச் சேர்ந்த டெல்லி பாபு என்பவர் தயாரிப்பதாக ஒப்பந்தம் போடப்பட்டது.
படப்பிடிப்புகள் கடந்த 2019ஆம் ஆண்டு துவக்கப்பட்டு அதில் கதாநாயகியாக மனோ சித்தராவும், கதாநாயகனாக ராஜா தேவூ நடித்து வந்துள்ளனர்.
படப்பிடிப்பின் வேலைகள் கிட்டத்தட்ட 70 சதவிகிதம் முடிவடைந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்த காலத்தில் இயக்குநர் அறையில் வைக்கப்பட்டிருந்த ஒப்பந்தங்களை தயாரிப்பாளர் எடுத்துச் சென்றுவிட்டதாகவும் , மேலும் படத்தின் மீதி பகுதியை வேறு ஒரு இயக்குனரை வைத்து இயக்கி வருவதாகவும் படத்தின் இயக்குனர் ரவிச்சந்திரன் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்
இந்த புகார் குறித்து இயக்குநரிடம் தொடர்பு கொண்டு பேசியபோது, “படத்தின் வேலைகள் 70 சதவீதம் முடிவடைந்த நிலையில் படத்திற்கு போடப்பட்ட ஒப்பந்தத்தை தயாரிப்பாளர் திருடிச் சென்று விட்டதாகவும் மேலும் தன்னுடைய படத்தில் வைக்கப்பட்டுள்ள பாடல் காட்சிகள் மற்றும் கதையின் சில பகுதிகளை எடுத்து வேறு படத்திற்காக தயாரிப்பாளர் டெல்லி பாபு பயன்படுத்தி வருவதாகவும் குற்றம் சாட்டினார்.

குறிப்பாக, படத்தில் நடிக்க கூடிய கதாநாயகி மற்றும் துணை நடிகைகளை தயாரிப்பாளரின் பாலியல் தேவைகளுக்கு தான் அழைத்துச் செல்லாததால் மாயமுகி படத்தில் இருந்து தான் வெளியேற்றப்பட்டதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் படத்தின் இயக்குனர் ரவிச்சந்திரன்.
இதே போன்று இந்த படத்தில் இசையமைப்பாளராக பணியாற்றியஜெயபாலா, கடந்த ஜூலை மாதம் 5-ஆம் தேதி மாயமுகி படத்திற்காக போடப்பட்ட இசை ஹார்ட் டிஸ்க்குகளை தயாரிப்பாளர் டெல்லி பாபு திருடிச் சென்று விட்டதாக விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தது குறிப்பிடத்தக்கது.
Related
Source: Dhinasari News – Vellithirai News
Leave a Reply