இயக்குனர் முகத்தில் புகைவிட்ட மீரா மிதுன்! களேபரமான ஷுட்டிங் ஸ்பார்ட்!

meera midhun smoking - 1

நடிகை மீரா மிதுன், சர்ச்சைகளுக்கு பஞ்சம் இல்லாதவர் என்பது நாம் அறிந்தது தான். தனக்கு பட வாய்ப்புகளே கிடைக்கவில்லை என, ஒவ்வொரு வீடியோவிலும் கதறி வந்த இவர், கிடைத்த பட வாய்ப்புகளை கூட நல்லபடியாக பயன்படுத்தி கொள்ளாமல், அங்கேயும் இப்படி பிரச்சனை செய்தால் யார் தான் இவருக்கு பட வாய்ப்புகள் கொடுப்பார்கள்? என யோசிக்க வைத்துள்ளது இந்த வீடியோ…

இயக்குனர் அன்பரசன் என்பவர் இயக்கி வரும் மிகவும் வித்தியாசமான கதையம்சம் கொண்ட திரைப்படம் ‘பேய காணோம்’ . ஒரு பேய்… மற்றொரு பேய காணவில்லை என்று புகார் கொடுக்கும் விதமாக இப்படடம் உருவாகி உள்ளது.

கவுசிக் ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தில், மீரா மிதுன் தான் ஹீரோயினாக நடித்துள்ளார். மேலும் தருண் கோபி, கோதண்டம் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்நிலையில், படப்பிடிப்பு தளத்தில் இயக்குனர், மீரா மிதுனுக்கும், காமெடி நடிகர் கோதண்டத்திற்கும், சீன் பற்றி விளக்கி கொண்டிருக்கும் போது, திடீர் என, அடுத்தவர்கள் முகத்தில் புகை விடுகிறோம் என்கிற நினைப்பு கூட துளியும் இல்லாமல், மீரா மீதுன் சிகரெட்டை பிடித்து குப்பு குப்பு என புகையை விடுகிறார். இதனால் இயக்குனர் மட்டும் அல்ல கோதண்டமும் செம்ம கடுப்பாகி விட்டார்.

meera midhun - 2

பின்னர் சீன் சொல்லும் போது புகை பிடிக்க வேண்டுண்டுமா? என இயக்குனர் கேட்க, அதற்க்கு மீரா மிதுன் இவரும் தானே சிகிரெட் பிடிக்கிறார் என கோதண்டத்தை கை காட்ட அவர், நான் இதுபோல் பீல்டில் பிடிப்பது இல்லை தனியாக சென்று தான் பிடிக்கிறேன். நீங்கள் இப்படி செய்வது எவ்வளவு பெரிய தவறு தெரியுமா என கேட்கிறார்.

ஆனால் மீரா மிதுன், இதையெல்லாம் பற்றி சற்றும் கண்டு கொள்ளாமல் ..
செம கூலாக புகையை குப்பு குப்புனு விடுவதால் கடுப்பான இயக்குனர் இயக்குனர் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார்.

இதற்கு மீரா மிதுன் நார்மலாக தான் சிகிரெட் பிடிக்கிறேன் இது ஒரு விஷயமா என்றும், அந்த மேக்அப் ஆர்ட்டிஸ்டை கூப்பிடுங்க.. இந்த மேக்அப் உங்க முகத்தில் போட்டால் தெரியும் எவ்வளவு எரிகிறது, இரிடேட் ஆகிறது என்று என தன் மீது துளியும் தவறு இல்லை என்பது போல் கூறியது தான் இயக்குனர் கோபத்தை மேலும் தூண்டி விட்டது.

இயக்குனரிடம் மீரா மிதுன் பேசியதை பார்த்து கடுப்பான காமெடி நடிகர் கோதண்டம்… இயக்குனரை விட அதிக சத்தம் போட்டு சண்டை போட துவங்கி விட்டார்.

பின்னர் பலர் அவரை சமாதானம் செய்த நிலையில், மீரா மிதுன் ஒருவழியாக முழு சிகிரெட்டையும் பிடித்து முடித்த பின் இனி சிகிரெட் பிடிக்க மாட்டேன் என கூறி கோதண்டத்தையும் சமாதானம் செய்து, மீண்டும் ஷூட்டிங் பணிகளில் கவனம் செலுத்தினார்.

இந்த வீடியோ வெளியாக… இதை பார்த்த நெட்டிசன்கள் சிலர் எங்க போனாலும் இப்படி தான் பிரச்சனைகளை இழுப்பீங்களா? என கேள்வி எழுப்பி வருகிறார்கள்…

Source: Dhinasari News – Vellithirai News

Leave a Reply