ஓடிடி இல்ல தியேட்டர்லதான் வருது – ரசிகர்களை குழப்பும் விஜய் சேதுபதி

laabam

எப்போது கொரோனா பரவல் காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டதோ அப்போதிலிருந்து ஓடிடி எனப்படும் இணையதளம் மற்றும் ஆப்களில் புதிய திரைப்படங்கள் வெளியாவது துவங்கிவிட்டது. குறிப்பாக தமிழ் சினிமாவில் சூர்யா நடித்த சூரரைப்போற்று திரைப்படம் ஒடிடியில் நல்ல வரவேற்பை பெற்று அதிக லாபத்தை கொடுத்துள்ளது.

எனவே, தற்போது தியேட்டர்கள் திறக்கப்பட்டுள்ள நிலையிலும், முன்னணி நடிகர்கள் தங்கள் படத்தை ஓடிடியில் வெளியிடுவதில் ஆர்வம் காட்டுகின்றனர். அதற்கு 2 காரணங்கள் இருக்கிறது. முதல் காரணம், கொரோனா பரவல் காரணமாக தற்போது தியேட்டர்களில் படம் பார்க்க அதிக ரசிகர்கள் வருவதில்லை. ஒரு பக்கம் அமேசான், நெட்பிளிக்ஸ் போன்ற ஓடிடி நிறுவனங்களில் படத்தை வெளியிடும்போது தயாரிப்பாளருக்கு நல்ல லாபமும் கிடைக்கிறது என்பதுதான்..

ஜனநாதன் இயக்கத்தில் விஜய்சேதுபதி தயாரித்து நடித்து வந்த லாபம் திரைப்படம் நெட்பிளிக்ஸில் வெளியாகவிருப்பதாக விஜய்சேதுபதியே தனது டிவிட்டர் பக்கத்தில் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இது அவரின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது.

தற்போது இடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை. லாபம் திரைப்படம் தியேட்டரில் வெளியாகும் என விஜய் சேதுபதி இன்று டிவிட் செய்துள்ளார்.

 

%d bloggers like this: