
தல அஜித் நடித்த வலிமை திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ரஷ்யாவில் நடந்த நிலையில் ரஷ்யாவை சேர்ந்த டிரைவர் ஒருவர் அஜித்துக்கு அன்பு பரிசு கொடுத்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது
வலிமை படக்குழுவினர்களை அவர்கள் தங்கியிருக்கும் ஹோட்டலில் இருந்து படப்பிடிப்பு தளத்திற்கு அழைத்துச் சென்ற டிரைவர் அலெக்ஸ் என்பவர் அஜித்துடன் நெருங்கி பழகும் வாய்ப்பை பெற்றுள்ளார்
இந்த நிலையில் அஜித் அவருக்கு சில பரிசுகள் கொடுத்த நிலையில் அந்த டிரைவரும் அஜித்துக்கு சில பரிசுகளை கொடுத்து ஆச்சரியப்படுத்தி உள்ளார்.
டிரைவர் கொடுத்த பரிசு இந்த நகரமே நான் உங்களை நேசிக்கிறது. நீங்கள் ஒரு சிறந்த மனிதன் என பிரிண்ட் செய்யப்பட்ட டீசர்ட்கள், சில மில்க் சாக்லேட் மற்றும் அஜித் பெயர் பொறிக்கப்பட்ட ஒரு காபி கப் ஆகியவற்றை அஜித்துக்கு அந்த டிரைவர் பரிசாக கொடுத்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் அவர் அஜித்திடம் அதனை கொடுக்கும் போது இங்கு உள்ள அனைவரும் உங்களை நேசிக்கிறார்கள். நான் சந்தித்த மனிதர்களில் நீங்கள் மிகவும் சிறந்த மனிதர் என்று கூறி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
Related
Source: Dhinasari News – Vellithirai News