நடிகை ரெஜினா நடிப்பில் உருவாகியுள்ள சூர்ப்பனகை படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் பிரபல நடிகை ரெஜினா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சூர்ப்பனகை.
திகில் கதையம்சம் கொண்ட இந்த படத்தை கார்த்திக் ராஜு இயக்கியுள்ளார்.
மேலும் இந்த படத்தில் அக்ஷரா கவுடா, மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆப்பிள் ட்ரீ ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார் .
இந்நிலையில் சூர்ப்பனகை படத்தின் அசத்தலான டிரைலர் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் ஜமீன்தார் பெண், தொல்பொருள் ஆராய்ச்சியாளர் என இரண்டு விதமான கேரக்டரில் ரெஜினா நடித்துள்ளார். தற்போது இந்த டிரைலர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.