குறுகிய காலத்தில் பிரபலமானவர் ‘ விஜய் சேதுபதி. ஒரே நேரத்தில் அடுத்தடுத்து பல படங்களில் நடித்தும், வெளியிட்டும் வருகிறார்.
இந்நிலையில் பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் நடிகர் விஜய் சேதுபதி மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
விஜய் சேதுபதி படப்பிடிப்பிற்காக பெங்களூரு சென்றிருந்த போதுதான் இந்த சம்பவம் அரங்கேறியது.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. விமானத்தில் மகா காந்தி என்பவர் விஜய் சேதுபதியுடன் செல்ஃபீ எடுக்க வேண்டுமென்று அவரின் உதவியாளர் ஜான்சனிடம் கோரிக்கை விடுத்தார். ஆனால் விஜய் சேதுபதியின் உதவியாளர் மறுத்துவிட்டார் என தெரிவிக்கப்படுகிறது.
அதனையடுத்து விமான நிலையத்திற்கு விஜய் சேதுபதி வந்ததும், மகா காந்தி போதையில் செல்ஃபீ எடுக்க முயன்றதாகவும், உதவியாளர் அதனை மறுத்ததால் தாக்கியதாகவும் அவர்கள் தரப்பில் கூறப்பட்டது.
இந்நிலையில் அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையின் போது மகா காந்தி கூறுகையில், “நான் விஜய் சேதுபதியிடம் “தேசிய விருது வாங்கியதற்கு வாழ்த்துகள்” என்றேன்., “இது தேசமா?” என்று கேட்டார்.
“குரு பூஜைக்கு வந்தீர்களா” என்றேன்.அதற்கு “யார் குரு?” என்றார். இது தொடர்பாக பேசியபோது என்னை அவர்கள் தாக்கினார்கள். அதனால் நான் திருப்பி தாக்கினேன்.
மேலும் விமான நிலைய CCTV காட்சிகளை கேட்டிருக்கிறேன். அவர்கள் என்னை தாக்கியதை நான் நிருபிப்பேன்” என்று மகா காந்தி கூறியுள்ளார்.
Actor #VijaySethupathi attacked in Bengaluru Airport.#VJS #Makkalselvan #Kollywood
— RockStar 🌟 (@iRockStarProMax) November 3, 2021