கள்ளபார்ட் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்! அரவிந்த் சாமி வேறு லெவல்..!

kalapart
kalapart

பெண்கள் அதிகம் விரும்பும் ஹீரோவாக இருந்து சித்தார்த் அபிமன்யூ என்ற நெகட்டிவ் ரோல் மூலம் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்தவர் நடிகர் அரவிந்த் சாமி.

இப்பொழுது பல திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். அந்தவகையில் சதுரங்க வேட்டை 2, வணங்காமுடி,கள்ளபார்ட், நரகாசூரன் ஆகிய திரைப்படங்கள் அரவிந்த் சாமிக்கு ரிலீசாக உள்ளது.

இந்த நிலையில் இயக்குனர் ராஜபாண்டி இயக்கத்தில் அரவிந்த்சாமி நடித்துள்ள கள்ளபார்ட் படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி இணையத்தை கலக்கிக் கொண்டுள்ளது.

மிகப் பெரிய நடிகர்களின் ரீ – என்ட்ரி என்றால் கட்டாயமாக அது ஏதாவது சைட் ரோலாக அல்லது வயதான கதாபாத்திரம் போல மட்டும் தான் இருக்கும் ஆனால் பெண்களின் கனவு கண்ணனாக வலம் வந்த நடிகர் அரவிந்த்சாமி சில ஆண்டுகளாக நடிக்காமல் இருந்தார் இந்த நிலையில் தனி ஒருவன் படத்தில் சித்தார்த் அபிமன்யூ என்ற நெகட்டிவ் கதாபாத்திரத்தின் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்து அசத்தி இருந்தார்.

aravind samy
aravind samy

அதுவரை ஹீரோவாக நடித்துக்கொண்டிருந்த அரவிந்த் சாமி முதல் முறையாக நெகட்டிவ் ரோலில் நடித்திருந்தது ரசிகர்களுக்கு வித்தியாசமாக மட்டுமல்லாமல் மிரட்சியாகவும் இருந்தது.

தொடர்ந்து நெகட்டிவ் கதாபாத்திரங்கள் வந்தாலும் சில கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து கொண்டு பெரும்பாலும் வித்தியாசமான கதைகளில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வரும் நடிகர் அரவிந்த் சாமி அடுத்ததாக என்னமோ நடக்குது, அச்சமின்றி உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் ராஜபாண்டி இயக்கத்தில் கள்ளபார்ட் என்ற படத்தில் நடித்துள்ளார். இதில் இவருக்கு ஜோடியாக நடிகை ரெஜினா கஸன்ட்ரா நடித்துள்ளார்.

வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் நடிகர் ஆனந்தராஜ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. மூவிங் பிரேம் பட நிறுவனம் சார்பாக எஸ்.பார்த்தி, எஸ்.எஸ்.வாசன் இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர். இசையமைப்பாளர் கே பிரசன்னா இசை அமைத்துள்ளார்.

aravind samy 1
aravind samy 1

உடலில் வெட்டு காயங்களுடன்
சென்ற ஆண்டே இப்படத்தின் படப்பிடிப்பு மொத்தமும் முடிக்கப்பட்டு இப்பொழுது ரிலீசுக்கு தயாராக உள்ளது. இந்த நிலையில் கள்ளபார்ட் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய்சேதுபதி வெளியிட்டுள்ளார்.

அதில் அரவிந்த்சாமி உடல் முழுவதும் வெட்டு காயங்களுடன் வாயில் சிகரெட் வைத்துக் கொண்டு கையில் தனக்குத்தானே கட்டுப்போட்டு கொள்கின்றவாரு செம மாஸாக உள்ளார். வித்தியாசமாக வெளியாகியுள்ள கள்ளபார்ட் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு ரசிகர்கள் பெரும் வரவேற்பை கொடுத்துள்ளனர்.

Source: Dhinasari News – Vellithirai News

Leave a Reply