தல அஜித்தை வைத்து படம் இயக்கணும்: குட்டி இயக்குநரின் கியூட் ஆசை!

Aashiq Jinu
Aashiq Jinu

சர்வதேச- தேசிய அளவில் விருதுகள் வென்ற 12 வயது இளம் இயக்குனர் அஜித்தை வைத்து படம் இயக்க ஆசை என கூறியுள்ளார்.

கேரளாவின் கொச்சி நகரை சேர்ந்தவர் மாஸ்டர் ஆஷிக் ஜினு. இவருக்கு வயது 12. இந்த வயதிலேயே சினிமா மீது மிகவும் ஆர்வம் கொண்டவர். குறும்படத்தை இயக்கத்தின் மூலம் தனது சினமா பயணத்தை தொடங்கினார்.

Aashiq Jinu1
Aashiq Jinu1

இவரது இயக்கத்தில் முதலில் வெளியான “பிடிகா” என்ற குறும்படம் கேரளாவின் மிகச்சிறந்த நுகர்வோர் விழிப்புணர்வு ஏற்படுத்திய படமாக இருக்கிறது.

அடுத்ததாக இவர் இயக்கிய “பசி” என்ற குறும்படம், கடந்த 2020- ஆம் ஆண்டுக்கான சிறந்த குறும்பட இயக்குனர் என்ற விருதை அவருக்கு பெற்றுக்கொடுத்தது.

kutti director
kutti director

6 குறும்படம், 1 ஆவணப்படம் உள்ளிட்டவை இயக்கி தேசிய விருதுகள் மற்றும் சர்வதேச விருதுகளை மாஸ்டர் ஆஷிக் ஜினு வென்றுள்ளார்.

தற்போது போதை விழிப்புணர்வு குறித்து வணிக ரீதியிலான படத்தை 30 நாட்களில் இயக்கி முடித்துள்ளார். நேற்று இந்த படத்தின் பார்ட்ஸ் லுக் போஸ்டர் மற்றும் டீசர் வெளியிட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த படத்திற்கு ஈ.வி.ஏ. என்று பெயரிடப்பட்டுள்ளது.

ajith10
ajith10

இந்த நிலையில், ஆஷிக் ஜினு ” அஜித் சாரின் தீவிர ரசிகன் நான். நான் இயக்கிய திரைப்படத்தை அஜித் சாரிடம் காண்பித்து, வருங்காலத்தில் அவரை வைத்து ஒரு அருமையான படம் இயக்குவது எனக்கு ஆசை..” என தெரிவித்துள்ளார்.

இதனை பார்த்த அஜித் ரசிகர்கள் வாழ்த்துக்கள் என கூறிவருகிறார்கள். மேலும், சிறு வயதிலேயே சினிமாவில் சாதித்துவரும் சிறுவன் ஆஷிக்கின் திறமையை, திரைத்துரையினர் மற்றும் ரசிகர்கள் அவரை பாராட்டி வருகிறார்கள்.

Source: Dhinasari News – Vellithirai News

Leave a Reply