[prisna-google-website-translator]

திருமணம்: வருங்கால கணவருடன் புகைப்படம் பதிவிட்ட நடிகை!

Vaishali 1
Vaishali 1

பிரபல சீரியல் நடிகை வைஷாலி தனது வருங்கால கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தைப் பகிர்ந்து திருமணத்தை அறிவித்துள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நம்ம வீட்டு பொண்ணு தொடரில் நடித்து பிரபலமானவர் நடிகை வைஷாலி தனிகா.

இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகும் மகராசி தொடரிலும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மேலும் பிரபல விஜய் தொலைக்காட்சி தொடரான பாண்டியன் ஸ்டோர்ஸில் ஐஸ்வர்யா என்ற வேடத்தில் முதலில் நடித்தவர் இவர் தான்.

இப்படி அடுத்தடுத்து சீரியலில் நடித்து தமிழக மக்களிடம் அறிமுகமானவர் வைஷாலி. இவருக்கு சீரியல் பார்க்கும் அனைத்து வீடுகளிலும் ரசிகர், ரசிகைகள் உள்ளனர்.

இந்த நிலையில் நடிகை வைஷாலி, தனது பிறந்தநாளை சமீபத்தில் கொண்டாடினார், அப்போது எடுக்கப்பட்ட படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

அந்தப் பதிவில், திருமணமாவதற்கு முன் கொண்டாடும் கடைசி பிறந்த நாள். விரைவில் நான் திருமதி தேவ் ஆக மாறப்போகிறேன். என்னை எப்பொழுதும் சிறப்பானவளாக உணரச் செய்கிறாய் சத்யதேவ்.

உன்னுடன் வாழ்வின் இரண்டாம் அத்தியாயத்தைத் தொடங்க விருக்கிறேன், என்று குறிப்பிட்டிருந்தார்.

Vaishali
Vaishali

அத்துடன் தனது வருங்கால கணவருடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, திருமணத்துக்கான பொருட்களை வாங்க கிளம்பிட்டோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

அதிரடியாக தனது திருமணத்தையும், தான் திருமணம் செய்ய இருக்கும் மாப்பிள்ளையின் புகைப்படத்தையும் இன்ஸ்டாவில் பதிவிட்டார். இதனையடுத்து இருவருக்கும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Source: Dhinasari News – Vellithirai News

Leave a Reply