மோகன்லால், பிருத்விராஜ் இசை கொண்டாட்டம்… வைரல் வீடியோ!

Mohan Lal
Mohan Lal

மோகன்லாலுக்கு நடிப்பு எந்த அளவிற்கு பிடிக்குமோ, அதே அளவிற்கு இசை மீது அதிக ஆர்வம் கொண்டவர். இவர் பாடிய வீடியோக்கள் பலவற்றை இவரது ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி உள்ளனர். அப்படி மற்றொரு வீடியோவையும் மோகன்லால் ரசிகர்கள் வைரலாக்கி உள்ளனர்.

மோகன்லால் சமீபத்தில் இசை கலைஞர்கள் சிலருடன் சேர்ந்து சூப்பர் தமிழ் பாடலான என்ஜாய் எஞ்சாமி பாடலுக்கு தாளம் போட்டுள்ளார். மோகன்லால் Cajon வாசித்த இந்த வீடியோ செம வைரலாகி வருகிறது. ரசிகர்கள் பலர் இந்த வீடியோவை அதிக அளவில் சோஷியல் மீடியாவில் பகிர்ந்து வருகின்றனர்.

மோகன்லால் Cajon இசையமைத்த வீடியோ வெளியான அடுத்த நாளே ப்ருத்விராஜ் Cajon இசையமைத்த வீடியோ ஒன்றும் வெளியாகி வைரலாகி உள்ளது.
மணிக்கே மகே ஹிதே என்ற பாடலை தான் ப்ருத்விராஜ் இசைத்துள்ளார். இந்த வீடியோவை ப்ருத்விராஜின் மனைவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட, ரசிகர்கள் அதை வைரலாக்கி உள்ளனர்.

prithiviraj
prithiviraj

ப்ருத்விராஜ் இரண்டாவதாக இயக்கி உள்ள ப்ரோ டாடி படத்தின் ஷுட்டிங் சமீபத்தில் நடந்து முடிந்தது. மோகன்லால் அடுத்தபடியாக டைரக்டர் ஷாஜி கைலாஷ் இயக்கும் Alone படத்தில் நடிக்க உள்ளார்.

மோகன்லாலும், ஷாஜி கைலாஷும் கிட்டதட்ட 12 ஆண்டுகளுக்கு பிறகு இணைந்துள்ள படம் இது. மோகன்லாலில் அதிகம் எதிர்பார்க்கப்படும் இதுவும் ஒன்றாகும்.

[embedded content]

Source: Dhinasari News – Vellithirai News

Leave a Reply