பிரபல நடிகர் பாலகிருஷ்ணா மருத்துவமனையில் அனுமதி!

bala krishna
bala krishna

தெலுங்கு திரையுலகில் முன்னணி ஹீரோவான நந்தமூரி பாலகிருஷ்ணா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 6 மாதங்களாக நந்தமூரி பாலகிருஷ்ணா தோள்பட்டை வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.

இதையடுத்து பஞ்சாரா ஹில்ஸ் கேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாலகிருஷ்ணாவுக்கு தோள்பட்டை அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. சிறப்பு மருத்துவர்கள் குழு பாலகிருஷ்ணாவின் தோளில் 4 மணி நேரம் அறுவைச் சிகிச்சை செய்துள்ளனர்.

தற்போது மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ள பாலகிருஷ்ணாவின் உடல் நிலை எப்படியுள்ளது என்பது குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ‘எங்களுடனான ஆலோசனையின் போது, ​​அவர் தனது வலது கையை தூக்க முடியவில்லை; தீவிர வலி இருப்பதாகத் தெரிவித்தார்.

எம்ஆர்ஐ சோதனை மூலம், எங்களின் தோள்பட்டை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ரகுவீர் ரெட்டி மற்றும் டாக்டர் பிஎன் பிரசாத் தலைமையிலான பஞ்சாரா ஹில்ஸில் உள்ள கேர் மருத்துவமனைகளில் உள்ள எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் குழு 4 மணி நேர அறுவை சிகிச்சை மூலம் தோள்பட்டை தசைநார்கள் வெற்றிகரமாக சரி செய்யப்பட்டுள்ளது.

மேலும் அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு, பாலகிருஷ்ணா நலமாக இருப்பதாகவும், டிஸ்சார்ஜ் செய்யத் தயாராக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Source: Dhinasari News – Vellithirai News

Leave a Reply