
பல வருட தாமதங்களை தாண்டி நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்துள்ளார். தனது டிவிட்டர் பக்கத்தில் ‘ஜனவரியில் கட்சித் துவக்கம், டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு.
#மாத்துவோம்_எல்லாத்தையும்_மாத்துவோம்
#இப்போ_இல்லேன்னா_எப்பவும்_இல்ல ’ என டிவிட் செய்துள்ளார்.
மேலும், ‘வரப்போகிற சட்டமன்ற தேர்தலில் மக்களுடைய பேராதரவுடன் வெற்றி பெற்று தமிழகத்தில் நேர்மையான நாணயமான வெளிப்படையான ஊழலற்ற, ஜாதி மதச் சார்பற்ற ஆன்மிக அரசியல் உருவாகுவது நிச்சயம். அற்புதம்.. அதிசயம்..நிகழும்’ என குறிப்பிட்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து அவரின் அரசியல் வருகைக்கு அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இயக்குனர் லிங்குசாமி தனது டிவிட்டர் பக்கத்தில் ‘புலி வருது .. புலி வருதுனு சொன்னாங்க .. ஆனா இப்போ சிங்கமே வந்துருச்சு. வாழ்த்துக்கள் சார்.’ என பதிவிட்டுள்ளார்.
புலி வருது .. புலி வருதுனு சொன்னாங்க ..
ஆனா இப்போ சிங்கமே வந்துருச்சு.
வாழ்த்துக்கள் சார். 💐💐#இப்போ_இல்லேன்னா_எப்பவும்_இல்ல https://t.co/5UVlolyEq5— Lingusamy (@dirlingusamy) December 3, 2020





Leave a Reply