அஜித் போல பணிவான மனிதரை பார்த்தது இல்லை: பிரபல நடிகர்!

karthikeya 1
karthikeya 1

தெலுங்குத் திரையுலகில் உள்ள இளம் ஹீரோக்களில் ஒருவர் கார்த்திகேயா. 2018ல் வெளிவந்த ‘ஆர்எக்ஸ் 100’ என்ற படம் மூலம் பெரிய வரவேற்பைப் பெற்றார்.

அதன்பிறகு சில படங்களில் ஹீரோவாக நடித்தார். 2019ல் நானி கதாநாயகனாக நடித்து வெளிவந்த ‘கேங் லீடர்’ என்ற படத்தில் வில்லனாக நடித்தார்.

அப்படத்தில் அவருடைய வில்லத்தன நடிப்புக்கும் ரசிகர்களிடம் வரவேற்பு கிடைத்தது. அஜித் நடிக்கும் ‘வலிமை’ படத்தில் வில்லனாக நடிப்பதன் மூலம் தமிழில் அறிமுகமாக உள்ளார்.

தெலுங்கில் ‘ராஜா விக்ரமார்கா’ என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். சமீபத்திய பேட்டி ஒன்றில் ‘வலிமை’ படம் பற்றியும், அஜித் பற்றியும் அவர் கூறியுள்ளதாவது, “எனது ‘உடல்’ தோற்றத்தைப் பார்த்தே ‘வலிமை’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

karthikeya
karthikeya

‘கேங் லீடர்’ படத்திலும் அந்த தோற்றத்திற்காகத்தான் எனக்கு வாய்ப்பு வழங்கியதாக அப்படத்தின் இயக்குனர் விக்ரம் குமார் கூறினார்.

அஜித் சார் போன்ற சூப்பர் ஸ்டார் படத்தில் முழுக்க முழுக்க நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிப்பது எனக்கு நம்பிக்கையூட்டுவதாக உள்ளது.

இப்போதே பல தமிழ்ப் படங்களில் நடிக்க எனக்கு வாய்ப்பு வந்து கொண்டிருக்கிறது. ‘வலிமை’ படம் என்னுடைய கேரியருக்கு ஒரு புதிய திருப்பத்தைத் தரும் என எதிர்பார்க்கிறேன்.முதல் நாள் படப்பிடிப்பில் நான் பதட்டத்துடன் இருந்தேன்.

ajith 1
ajith 1

அஜித் சார் என்னைத் தனியே அழைத்துச் சென்று என்னை சாந்தப்படுத்தினார். அதை இன்னும் அப்படியே ஞாபகத்தில் வைத்துள்ளேன். மொத்த குழுவும் என்னைக் கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். வலிமை’ படம் 2022 பொங்கலுக்கு வெளியாகிறது.

எனது வாழ்க்கையில் அஜித் சாரைப் போன்ற மிகப் பணிவான மனிதர் ஒருவரை இதுவரை பார்த்ததில்லை”. என்றார்

Source: Dhinasari News – Vellithirai News

Leave a Reply