
நாங்க வேற மாறி’ பாடல் யூடியூபில் 35 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்திருக்கிறது.
தல அஜித் தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருகிறார். வினோத் இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் “வலிமை”.
போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். மேலும், இந்த படத்திற்கு நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்நிலையில், இந்த படத்தின் “நாங்க வேற மாறி” பாடல் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், இந்த பாடல் யூடியூப் இணையதளத்தில் 35 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்திருக்கிறது.
[embedded content]