[prisna-google-website-translator]

மீண்டும் வாலிபம் கொள்ளப் போகிறதா வாலி..?

Ajith
Ajith

அஜித்தின் சூப்பர் ஹிட் படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் ரீமேக் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தல அஜித் தமிழ் சினிமாவில் நிஜ நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருகிறார். இவர் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் திரைப்படம் “வலிமை”. இந்த படத்தை போனிகபூர் தயாரித்துள்ளார்.

இதனையடுத்து அஜித்தின் அடுத்த படத்தையும் இவர்தான் தயாரிக்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், அஜித்தின் சூப்பர் ஹிட் படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் ரீமேக் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

vali - 1

அதன்படி, “வாலி” படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் ரீமேக் செய்வதாக கூறப்படுகிறது.

அஜித் – சிம்ரன் நடிப்பில் எஸ்.ஜே. சூர்யா 1999ஆம் ஆண்டு இயக்கிய படம் வாலி. இரட்டை வேடங்களில் நடித்திருந்த அஜித் ஒரு வேடத்தில் வாய் பேச முடியாத, காது கேளாத மாற்றுத் திறனாளியாக நடித்திருப்பார்.இந்தப் படம் தமிழில் மிகப்பெரிய ஹிட் அடித்தது. மேலும் எஸ். ஜே. சூர்யாவுக்கு இது முதல் படமாகும்.முதல் படத்திலேயே வித்தியாசமான கதையோடு தடம் பதித்த சூர்யா அதன் பிறகு தமிழில் மோஸ்ட் வாண்டட் இயக்குநராக ஆனார் என்பது அனைவரும் அறிந்தது.

இந்நிலையில் வாலி படத்தின் ஹிந்தி ரீமேக் உரிமையை, அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களை தயாரித்த போனி கபூர் கைப்பற்றியிருக்கிறார்.

ஆனால் வாலி படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்வதற்கு போனி கபூருக்கு தடை விதிக்க வேண்டுமென எஸ்.ஜே. சூர்யா நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.

ponikapoor 2 - 2

ஆனால் வாலி படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்யலாம் என போனிகபூருக்கு அனுமதி அளித்து எஸ்.ஜே. சூர்யாவின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதனையடுத்து வாலி ரீமேக்குக்கான பணிகள் தொடங்கிவிட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

அதேசமயம் இதற்கு எதிராக எஸ்.ஜே. சூர்யா உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

2017ஆம் ஆண்டு ஆரண்ய காண்டம் பட தயாரிப்பாளர்கள் மீது அப்படத்தின் இயக்குநர் தியாகராஜ குமாரராஜா தாக்கல் செய்த வழக்கில், ‘படத்தின் டப்பிங் உரிமை தயாரிப்பாளருக்கு இருந்தாலும் அதன் ரீமேக் உரிமை கதையை எழுதியவருக்கே இருக்கிறது’ என தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது.

இந்த தீர்ப்பை அடிப்படையாக வைத்து சூர்யா உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருக்கிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Source: Dhinasari News – Vellithirai News

Leave a Reply