[prisna-google-website-translator]

வலிமை படத்தின் மதர் சென்டிமெண்ட் பாடல் ப்ரமோ!

ajith valimai - 1

போனி கபூர் தயாரிப்பில் நடிகர் அஜித் நடித்து வருகிற பொங்கலை முன்னிட்டு திரைக்கு வரவிருக்கிற படம் ‘வலிமை’.

வினோத் இயக்கியுள்ள இந்தப் படத்தின் கிலிம்ப்ஸ் வீடியோ மற்றும் வேற மாறி பாடல் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன.

இந்தப் படத்தில் தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாக நடித்துள்ளார். மேலும் சுமித்ரா, ஹுமா குரேஷி, புகழ், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்தப் படத்துக்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்த நிலையில் இந்தப் படத்தில் இருந்து இரண்டாம் பாடல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி தற்போது அம்மாவுடனான நேசத்தை பிரதிபலிக்கும் பாடலின் ப்ரமோ வெளியாகியுள்ளது.

இந்தப் பாடலை விக்னேஷ் சிவன் எழுத, சித் ஸ்ரீராம் பாடியுள்ளார். முழு பாடல் வருகிற டிசம்பர் 5 ஆம் தேதி மாலை 6.30க்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

[embedded content]

Source: Dhinasari News – Vellithirai News

Leave a Reply