
பிரபல நடிகர் புனித் ராஜ்குமார் (46) கடந்த அக்டோபர் 29 ஆம் தேதி திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
இந்த செய்தியை கேட்டு ரசிகர்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் அதிர்ச்சியடைந்தனர். பெரும் ரசிகர்கள் பட்டாளம் கொண்ட புனித் ராஜ்குமார் மறைவு கன்னட திரையுலகம் மட்டுமல்லாமல், தென்னிந்திய திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் புனீத் ராஜ்குமார் இறப்பதற்கு முன்னாள் நடித்த காந்தடகுடி படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.
இந்தப் படம் ட்ராவல் அட்வெஞ்சர் படமாக உருவாகியுள்ளது. புனீத் ராஜ்குமாரின் தந்தை ராஜ்குமார் நடித்த காந்தடகுடி என்ற தலைப்பே இவரது படத்திற்கும் வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
[embedded content]