

தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து புன்னகை இளவரசியாக ரசிகர்களின் மனதை பெருமளவில் கவர்ந்தவர் சினேகா.
அவர் அச்சமுண்டு அச்சமுண்டு என்ற படத்தில் நடித்தபோது தன்னுடன் நடித்த நடிகர் பிரசன்னாவை காதலித்து கடந்த 2012ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
அவர்கள் இருவரும் பார்ப்போர் அனைவரும் வியக்கும் வகையில் அழகிய நட்சத்திர தம்பதிகளாக விளங்கி வருகின்றனர். இந்த ஜோடிக்கு விஹான் என்ற மகனும், ஆத்யந்தா என்ற மகளும் உள்ளனர்.
இந்நிலையில் அண்மையில் சினேகாவின் மகள் ஆத்யந்தா பிறந்தநாள் விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டுள்ளது.
இதற்கிடையில் சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் சினேகா மற்றும் பிரசன்னா இருவரும் அவ்வபோது தங்களது குடும்ப புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவர்.
அவ்வாறு தற்போதும் இருவரின் அழகிய ரொமான்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி லைக்ஸ்களை குவித்து வருகிறது.
Source: Dhinasari – Daily Tamil News – Vellithirai News
Leave a Reply