சர்வானந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘கணம்’ படத்திலிருந்து அம்மா பாடல் வெளியாகியுள்ளது.
தெலுங்கு நடிகர் சர்வானந்த் தமிழிலும் சில படங்களில் நடித்து பிரபலம் ஆகியுள்ளார்.
இந்நிலையில் சர்வானந்த் தற்போது ‘கணம்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் சார்பாக தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு தயாரிக்க உள்ளார்.
நடிகை ரித்து வர்மா கதாநாயகியாக நடிக்கிறார். இந்தப் படத்தில் நடிகை அமலா ஷர்வானந்தின் அம்மாவாக நடிக்கிறார். இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகிறது. நாசர், சதீஷ், ரமேஷ் திலக் உள்ளிட்டோரும் படத்தில் நடித்து வருகின்றனர். படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைக்கிறார். இந்தப் படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. படம் டைம் ட்ராவல் கதைக்களத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது படத்திலிருந்து அம்மா பாடல் வெளியாகியுள்ளது. இந்தப் பாடலை சித் ஸ்ரீராம் பாடியுள்ளார். வலிமை படத்தில் இடம் பெற்ற அம்மா பாடலையும் சித் ஸ்ரீராம் பாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.