ajith5 - Dhinasari Tamilajith5 - Dhinasari Tamil

வலிமை படம் ரிலீசாக இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் அஜித் பற்றியும், வலிமை பற்றியும் வெளியாகும் தகவல்களால் சோஷியல் மீடியாவில் #AjithKumar, #Valimai போன்ற ஹேஷ்டேக்குகளை ரசிகர்கள் தொடர்ந்து டிரெண்டிங் ஆக்கி அதிர வைத்து வருகிறார்கள்.

அஜித் நடித்துள்ள வலிமை படம் பிப்ரவரி 24 ம் தேதி ரிலீசாக உள்ளது. பிரம்மாண்டமாக இந்த படத்தை உலகம் முழுவதும் ரிலீஸ் செய்ய ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இதற்கான பேப்பர் விளம்பரங்களும் இன்று முதல் வெளியிடப்பட்டு வருகின்றன. வலிமை படம் ரிலீசாக உள்ள தியேட்டர்களின் பட்டியலும் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது.

டிக்கெட் புக்கிங் ஏற்கனவே துவங்கி, பெரும்பாலான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து விட்டதாக கூறப்படுகிறது.

கேரளாவில் டிக்கெட் புக்கிங் இன்று காலை துவங்கி நடைபெற்று வருகிறது. திருவனந்தபுரத்தில் ரசிகர்கள் ஷோ காலை 5 மணிக்கு திரையிடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பிப்ரவரி 24 ம் தேதி மட்டுமின்றி தொடர்ந்து 4 நாட்களும் முதல் ஷோ காலை 4 மணிக்கு திரையிடப்பட உள்ளது. மலேசியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் எந்தெந்த தியேட்டர்களில் வலிமை ரிலீசாக உள்ளது என்ற பட்டியல் ஏற்கனவே வெளியிடப்பட்டு விட்டது.

வலிமை ரிலீஸ் நெருங்கி வரும் நிலையில், வலிமை படம் பற்றி போனி கபூர் கொடுத்துள்ள பேட்டியும், அவர் வெளியிட்டு வரும் ப்ரோமோ வீடியோக்களும் செம வைரலாகி வருகின்றன.

ரசிகர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருவதால் வலிமை 2 படமும் விரைவில் உருவாகும் என அவர் தெரிவித்துள்ளார். அதனால் ஏகே 61, வலிமை 2 என அடுத்தடுத்து அஜித்தை வைத்து படம் எடுத்த போனி கபூர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. வலிமை 2 வும் வருகிறது என்ற தகவல் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்டாக அமைந்துள்ளது.

இதற்கிடையில் நேற்று #AjithKumar என்ற ஹேஷ்டேக் மீண்டும் ட்விட்டர் டிரெண்டிங்கில் முதல் இடம் பிடித்துள்ளது. இதற்கு காரணம் வலிமை ரிலீசிற்கு தயாராகி வருவது மட்டுமல்ல. அஜித் பற்றிய மற்றொரு தகவல் வெளியாகி உள்ளதும் தான்.

வலிமை ஷுட்டிங்கின் போது நடிகை ஹுமா குரேஷி, நீங்கள் எப்படி யார் மீதும் கோபப்படாமல் இருக்கிறீர்கள் என அஜித்திடம் கேட்டுள்ளார். அதற்கு அஜித், என் மீது திருப்பி கோபத்தை காட்ட முடியாத நிலையில் இருக்கும் யார் மீதும் கோபத்தை வெளிப்படுத்தும் உரிமை எனக்கு கிடையாது என்றுள்ளார்.

சக மனிதர்களை மதிக்கும் அஜித்தின் இந்த குணத்தை கொண்டாட தான் ரசிகர்கள் அஜித்தை டிரெண்டிங் ஆக்கி உள்ளனர். வலிமை பற்றிய தகவல்களும், அஜித்திற்கு பாராட்டுக்களும் தொடர்ந்து சோஷியல் மீடியாவை அதிர வைத்து வருகிறது. நல்ல மனசு என அஜித்தின் குணங்களை பாராட்டி வருகின்றனர்.

Source: Dhinasari – Daily Tamil News – Vellithirai News

Leave a Reply

Trending