வலிமை படத்தை இயக்கியதற்காக பெருமைப்படுகிறேன் என இயக்குநர் எச்.வினோத் தனது ட்விட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
வலிமைத் திரைப்படம் பிப்ரவரி 24ந் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.
இப்படத்திலிருந்து ஏகப்பட்ட ப்ரோமோக்கள் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் திக்குமுக்காட வைத்துள்ளது.
ஹெச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் வலிமை படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தில் அஜித்துடன் பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி ஹீரோயினாகவும், வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயாவும் நடித்துள்ளார்கள்.
படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். வலிமை திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் வெளியாவதாக உள்ளது.
வலிமை திரைப்படம் பொங்கலுக்குத் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், கொரோனா பரவலால் வெளியீட்டுத் தேதி தள்ளிவைக்கப்பட்டு, தற்போது பிப்ரவரி 24ந் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் இப்படம் அஜித்தின் மிகப்பெரிய அளவில் வெற்றிப்பெற்ற படங்களாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
தமிழகம் மட்டுமின்றி உலகெங்கிலும் இப்படத்தின் முன் பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
காவல்துறை அதிகாரியாக நடிக்கும் அஜித், இப்படத்தில், பல ஆபத்தான ஸ்டண்ட் மற்றும் ரேஸ் காட்சிகளை தானே செய்து ரசிகர்களை பிரம்மிப்பில் ஆழ்த்தி உள்ளார்.
பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் வலிமை படத்தை பாக்ஸ் ஆபிஸ் பிளாக் பஸ்டராக மாற்ற அதிரடியாக பல ப்ரோமோக்களை அடுத்தடுத்து வெளியிட்டு அஜித் ரசிகர்களை மகிழ்ச்சியில் திக்குமுக்காட வைத்துள்ளார்.
எச்.வினோத் அளித்த பேட்டியில்,
வலிமை ஒரு சரியான குடும்ப பொழுதுபோக்கு படமாகும். இது சமூக பிரச்சினைகளையும் பேசுகிறது. குடும்பப் படம் என்று சொல்லும்போது, குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகள் அல்ல, அது ஒரு குடும்பம் எதிர்கொள்ளும் பிரச்சனை, அது எப்படி ஒரு குற்றத்தில் விளைகிறது,
ஹீரோ எப்படி அந்தக் குற்றத்தை தன் குடும்பத்தைச் சிதைக்காமல் தடுக்க முயல்கிறார். குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம்’ என்கிறார்.
தொடர்ந்து அவர் கூறுகையில், கொரோனா ஊரடங்கு தங்கள் திட்டங்களை சீர்குலைத்தாலும், இந்த வழியில் சில நன்மைகள் நடந்துள்ளது.
நாங்கள் படத்தை தீபாவளிக்கு வெளியிட விரும்பினோம். ஆனால் அது நடக்கவில்லை. பிறகு, டிசம்பர் அல்லது பொங்கல் ரிலீஸ் என்று நினைத்தோம், அதையும் செய்ய முடியவில்லை. உண்மையில், கொரோனாவின் ஒவ்வொரு அலையும் எங்களுக்கு வெவ்வேறு சிக்கல்களைக் கொண்டு வந்தன.
ஆனால் தாமதங்கள் மேலும் இரண்டு மொழிகளில் படத்தை வெளியிட எங்களுக்கு உதவியது என்று நான் உணர்கிறேன். நடிகர்கள் தேர்வு நேரத்தில் கூட, படக்குழு படத்தை ஒரு பான்-இந்தியா படமாக திட்டமிட்டது.
OTT பிளாட்ஃபார்ம்கள் வெற்றி பெறுவதால், நீங்கள் திரையரங்குகளில் வெளியிடாவிட்டாலும் கூட, உங்கள் படம் ஒரு இந்தியப் படமாக மாறும் சாத்தியம் உள்ளது. ஏனெனில் அவர்கள் படத்தை பல மொழிகளில் டப் செய்கிறார்கள்’ என்று கூறினார்.
இந்நிலையில், வலிமை திரைப்படத்தை பார்த்த, அஜித் சார் என்னிடம், இந்தப் படத்தை செய்ததற்காக நான் பெருமைப்படுகிறேன் என்று கூறினார்.
இந்த படத்தை செய்ததில் நான் பெருமைப்படுகிறேன். இந்த படத்தை எடுத்த பிறகு நான் ஒரு பெருமைமிக்க மகன் போல் உணர்கிறேன் என்பதால், இந்த படத்தை என் அம்மா மற்றும் அப்பா மற்றும் என் குடும்பத்தினருக்கு திரையிடப் போகிறேன். என தனது ட்விட்டர் பக்கத்தில் நெகிழ்ந்து பதிவிட்டுள்ளார்.