

அஜித் நடிப்பில் எச். வினோத் இயக்கத்தில் 24ஆம் தேதி பிரமாண்டமாக வெளியாகவுள்ள திரைப்படம் வலிமை.
போனிகபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கி உள்ள இப்படத்தில் நடிகர் அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.
இப்படத்தில் ஹீரோயினாக காலா பட நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, குக் வித் கோமாளி புகழ் ஆகியோர் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்தில் வில்லன் கேரக்டரில் பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயா (Karthikeya) நடித்துள்ளார். யுவன் மற்றும் ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது.


அதன்படி வருகிற பிப்ரவரி 24-ந் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய 4 மொழிகளில் இப்படத்தை ரிலீஸ் செய்ய உள்ளனர். ரிலீஸ் நெருங்கி வருவதால் இதற்கான பணிகளும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளன.
இப்படத்தின் டிக்கெட் புக்கிங் தொடர்ந்து நான்கு நாட்களாக செய்து வரப்படுகிறது.
படத்தின் ரிலீசுக்கு இன்னும் ஒரு நாளே எஞ்சி உள்ளதால், திரையரங்குகளில் முன்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பெரும்பாலான திரையரங்குகளில் முதல் நாள் டிக்கெட் முழுவதுமாக விற்றுத்தீர்ந்து விட்டதாக கூறப்பட்டு வருகிறது.


இந்நிலையில், வலிமை படத்தின் டிக்கெட் இலவசமாக பெற ஒரு அறிய வாய்ப்பு ஒன்று கிடைத்துள்ளது. அதன்படி மத்திய அரசின் தென்னிந்திய பன்மாநில கூட்டுறவு அங்காடி (SIMCO) மையத்தில் ரூ. 2999-க்கு மேல் மளிகை பொருள் வாங்கினால் வலிமை (Valimai) படத்தின் டிக்கெட் இலவசமாக வழங்கப்படும் என்று அதிரடி ஆஃபர் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த டிக்கெட்டின் மதிப்பு ரூ.500 இருக்குமாம். இதில் பாப்கார்ன், கூல்டிரிங்ஸ் ஆகியவையும் இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் முதலில் வலிமை படத்தின் 1 மணி காட்சி ரத்து செய்யப்பட்டது. இதன்பின் 4 மணி காட்சி தான் வலிமை படத்திற்கு முதல் காட்சி என்று கூறப்பட்டிருந்தது.


இதனால், அஜித்தின் ரசிகர்களுக்கும் வலிமை படத்தின் 4 மணி காட்சியை திரையரங்கில் கொண்டாட ஆர்வமாக காத்திருந்தனர்.
இந்நிலையில், வலிமை படத்திற்காக அதிகாலை 4 மணி காட்சியும் ரத்து என அதிர்ச்சியளிக்கும் தகவலை பிரபல ரோகினி திரையரங்க உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
இந்த தகவல் அஜித் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
Source: Dhinasari – Daily Tamil News – Vellithirai News
Leave a Reply