

அஜித் மனைவி ஷாலினிக்கு முத்தமிடும் புகைப்படம் வைரலாகி வருகிறது . இந்த புகைப்படத்தை ஷாமிலி இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவர் பிரபல நடிகையான ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அனோஸ்கா மற்றும் ஆத்விக் என ஒரு மகனும் மகளும் உள்ளனர்.
திருமணமாகி 23 வருடங்கள் ஆகிறது. இந்த நிலையில் அஜித் தன்னுடைய காதல் மனைவி ஷாலினிக்கு முத்தமிடும் புகைப்படத்தை ஷாலினியின் சகோதரி ஷாமிலி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இவர் வெளியிட்டுள்ள இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போல பரவி ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது.
Source: Dhinasari – Daily Tamil News – Vellithirai News
Leave a Reply