தி காஷ்மீர் ஃபைல்ஸ் படம் பார்க்க செல்பவர்களுக்கு ஆட்டோ கட்டணம் கிடையாது என்று ஆட்டோ டிரைவர் ஒருவர் அறிவித்திருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’. இப்படத்தில் அனுபம் கெர், மிதுன் சக்ரவர்த்தி, பல்லவி ஜோஷி, தர்ஷன் குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
பிரதமர் மோடி படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டு தெரிவித்ததுடன், ஹரியானா, மத்தியப் பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களில் இப்படத்திற்கு வரிவிலக்கும் அளிக்கப்பட்டுள்ளது.
90களில் காஷ்மீரில் இருந்து வெளியேற்றப்பட்ட பண்டிட்கள் மற்றும் இந்து பெண்களை கொடுமைப்படுத்திய உண்மைக் கதையை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
இதில் இஸ்லாமியர்கள் காஷ்மீர் பண்டிட்டுகளைக் கொலை செய்வது, இந்து பெண்களை வன்கொடுமைகளுக்கு ஆளாக்கி கொல்வது, மதம் மாற்றுவது சிறுகுழந்தைகளைக் கொல்வது, குழந்தைகளை மிரட்டி அதன் மூலம் பெண்களை வன்கொடுமை செய்வது, மதம் மாறு அல்லது நாட்டை விட்டு வெளியேறு என அகதிகளாக சொந்த மண்ணில் இருந்து இந்துக்களை கொடுமை செய்த உண்மைகள் காட்சிகளாக இடம்பெற்றுள்ளது.
உண்மை பொய்பரப்பர்களுக்கு என்றுமே சுடும். அதனால் இந்துக்களை அழிக்க துடிக்கும் மறைமுக சக்திகள், அரசியல்வாதிகளிடமிருந்து எதிர்ப்பு கிளம்புவது இயல்பான விஷயம்தான். இத்தனை நாட்களாக மறைக்கப்பட்ட, பொய்யாக பரப்பப்பட்ட, சுயநலவாதி அரசியல்வாதிகளால் புதைக்கப்பட்ட கொடுமைகளை இப்படம் வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளது.
எங்கஎங்கோ, எந்த நாட்டிலோ மக்களுக்காக குரல் கொடுத்து, தான் ஒரு சமூக ஆர்வலர் எனக் காட்டிக் கொள்பவர்கள் பலர், சொந்த நாட்டில் நடந்த இந்த கொடுமைகளுக்கு அன்றும் சரி இன்றும் சரி வாய்மூடி இருப்பது அவர்களின் மனோபாவத்தை தெளிவாகக் காட்டுகிறது. இதில் பல மீடியாக்களும் அடக்கம்.
இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு.. எனக்கூறி இங்கு இந்துக்களுக்கு பல கொடுமைகள் அரங்கேறுகின்றன. இதில் சுயநலவாதி இந்துக்களே நடுநிலைவாதிகள் என்ற பெயரில் கோடாரி காம்பாக செயல்படுவது தான் வெட்கத்தகுந்தது. உண்ட வீட்டிற்கு இரண்டகம் நினைப்பதுவும், தான் பிழைக்க தன் தாயையும் தாரத்தையும் விற்கும் அவலத்திற்கு ஒப்பானதும், வருந்ததக்கதும் ஆகும்.
இந்நிலையில் உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவர் தி காஷ்மீர் ஃபைல்ஸ் படம் பார்க்க செல்பவர்களுக்கு ஆட்டோ கட்டணம் கிடையாது என்று அறிவித்துள்ளார்.
அத்துடன் தனது ஆட்டோவில் திரையரங்குகளுக்கு செல்லும் நபர்களை இலவசமாக அழைத்துச் சென்று செல்லும் பணியையும் அவர் கடந்த சில நாட்களாக மேற்கொண்டு வருகிறார்.
இந்தப்படம் ஒவ்வொரு இந்துவுக்கும் போய் சேரவேண்டும் என்ற நோக்கத்திற்காக தான் இந்த சலுகையை தான் அறிவித்திருப்பதாக ஆட்டோ டிரைவர் தெரிவித்துள்ளார்.