[prisna-google-website-translator]

RRR பட ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு கோல்டன் குளோப்’ விருது; பிரதமர் மோடி வாழ்த்து !


nattu nattu song - Dhinasari Tamilnattu nattu song - Dhinasari Tamil

பிரபல இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான RRR படத்தில் இடம்பெற்றிருக்கும் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு ‘கோல்டன் குளோப்’ விருது கிடைத்திருக்கிறது. இதையடுத்து, படக்குழுவினருக்கு பாரத பிரதமர் மோடி வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார்.

சுதந்திரப் போராட்ட வீரர்களான அல்லூரி சீதாராம ராஜு மற்றும் கொமரம் பீம் ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு RRR படம் உருவாகி இருந்தது. இத்திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் எனெர்ஜியான பாடலான நாட்டு நாட்டு பாடல் மிகவும் பிரபலமடைந்தது. கடைக்கோடி கிராமம் வரை சென்று பட்டி தொட்டி எங்கும் ஒலித்தது.

எம். எம்.கீரவாணி இசையமைத்திருந்த இப்பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த நிலையில், ஆர்ஆர்ஆர் திரைப்படம் 14 பிரிவுகளில் ஆஸ்கார் 2023 விருதுக்காக சமர்ப்பிக்கப்பட்டது. மேலும், இப்படம் கோல்டன் குளோப்ஸ் 2023 விருதுக்காக 2 பரிந்துரைகளை பெற்றிருந்தது.

இந்த சூழலில்தான், இன்று நடைபெற்ற கோல்டன் குளோப்ஸ் விருது விழாவில் ஆர்ஆர்ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு ஒரிஜினல் பாடல் பிரிவில் கோல்டன் குளோப் விருது கிடைத்திருக்கிறது. இவ்விருதை படத்தின் இடையமைப்பாளர் எம். எம்.கீரவாணி பெற்றார்.

இந்திய திரைப்படம் பெறும் முதல் கோல்டன் குளோப் விருது இது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் சமீப காலமாகவே ஹிந்து வெறுப்பு, கலாச்சார வெறுப்பு , தேசப் பிரிவினையை ஊக்குவித்தல் என இவைகளை முன்னிறுத்தி திரைப்படங்கள் வெளிவந்துகொண்டிருந்த நிலையில், ராஜமௌலி இயக்கத்தில் தேசப்பற்றினை, ஆன்மிகத்தினை உயர்த்திப் பிடிக்கும் வகையில் வெளிவந்த RRR படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு கோல்டன் க்ளோப் விருது கிடைத்திருப்பது தேசப் பிரிவினையை தூண்டும் தீய சக்திகளுக்கு பெரும் அதிர்ச்சியளித்துள்ளது.

தமிழ் திரைப்படத்துறை இதிலிருந்து நல்ல பாடம் கற்கவேண்டும் என்று தேசபக்த திரை நட்சத்திரங்களிடமிருந்து குரல் எழுந்து வருகிறது.

Source: Dhinasari – Daily Tamil News – Vellithirai News

Leave a Reply