

பரவை : துணிவு படம் வெற்றி பெற வேண்டி அஜீத் ரசிகர்கள் 30 பேர் பழநிக்கு பாத யாத்திரையாக சென்றனர்.
நடிகர் அஜீத் நடித்து விரைவில் வெளிவர உள்ள படம் துணிவு. இந்த படம் வெற்றி பெற வேண்டி மதுரை மாவட்டம் பரவை தேசிய நாயகன் அஜீத் குமார் ரசிகர் மன்றத்தினர் பழநிக்கு பாதயாத்திரை சென்றனர். பரவை ஏகாம்பரஸ்வரர் கோயிலில் உள்ள விநாயகர் சந்நிதியில் இருந்து 30 க்கும் மேற்பட்டோர் பாதயாத்திரை கிளம்பினர். பரவை கார்த்தி தலைமையில் அஜீத் ரசிகர் மன்றத்தினர் பரவை ராகுல், ராக்கெட் ரஞ்சித், பிரசன்னா , ராஜா, உட்பட ஏராளமானோர் பாதயாத்திரையாக கிளம்பி சென்றனர்.