பொன்னியின் செல்வன்-2 திட்டமிட்டபடி ஏப்ரல் 28-ல் திரையில்..


images 2023 03 01T155212.646 - Dhinasari Tamil

பொன்னியின் செல்வன் 2 படத்தின் இறுதி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டது.திட்டமிட்டபடி ஏப்ரல் 28-ந்தேதி தேதி வெளியாவது உறுதி என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

மணிரத்னம் இயக்கிய ‘பொன்னியின் செல்வன்’ படம் இரண்டு பாகங்களாக தயாராகி முதல் பாகம் கடந்த வருடம் செப்டம்பர் 30-ந்தேதி உலகம் முழுவதும் 5 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் வெளியாகி ரூ.500 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை நிகழ்த்தியது.

இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர்.

பொன்னியின் செல்வன் 2-ம் பாகம் ஏப்ரல் மாதம் 28-ந்தேதி வெளியாகும் என்று அறிவித்து அதற்கான ஏற்பாடுகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

சில தினங்களுக்கு முன்பு கிராபிக்ஸ் உள்ளிட்ட தொழில்நுட்ப பணிகளை முடிப்பதில் தாமதம் ஏற்படுவதால் பொன்னியின் செல்வன் 2 ரிலீசை அக்டோபர் மாதத்துக்கு தள்ளி வைக்க முடிவு செய்து இருப்பதாக வலைத்தளத்தில் தகவல் பரவியது.

இதனை படக்குழுவினர் மறுத்து திட்டமிட்டபடி ஏப்ரல் 28-ந்தேதி தேதி வெளியாவது உறுதி என்று தெரிவித்தனர்.

இந்நிலையில், இப்படத்தின் கிளிம்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. ஒரு நிமிடம் உள்ள இந்த வீடியோவில் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், ஜெயராம் ஆகியோர் படத்தில் தங்களது கதாபாத்திரங்களை விவரிக்கின்றனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Source: Dhinasari – Daily Tamil News – Vellithirai News

Leave a Reply