
95-வது ஆஸ்கர் விழாவில், விருதை வழங்குகிறார் தீபிகா படுகோனே.அவருக்கு பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வரும் தீபிகா படுகோன் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் பதான். பல்வேறு விமர்சனங்களையும், சர்ச்சைகளையும் தாண்டி படம் வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் உள்ளார் தீபிகா படுகோன்.
தற்போது அவருக்கு மேலும் ஒரு அங்கீகாரம் கிடைத்துள்ளது. 95-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் வரும் மார்ச்12 ஆம் தேதி மிகப்பிரமாண்டமாக நடைபெறவுள்ளது.
இந்நிலையில் ஆஸ்கர் அகாடமி நிர்வாகம் விருது வழங்குபவர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் தீபிகா படுகோன் பெயரும் இடம்பெற்றுள்ளது. இதனை தீபிகா படுகோனும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
தீபிகா படுகோன் மட்டுமின்றி ஆஸ்கர் விருதுகளை டுவைன் ராக் ஜான்சன், அவதார் பட நடிகை ஜோ சல்டானா மற்றும் ஹாலிவுட் பிரபலங்களான ரிஸ் அகமத், எமிலி பிளன்ட், சாமுவேல் எல். ஜாக்சன், டோனி யென் உள்ளிட்ட பல பிரபலங்களும் வழங்க உள்ளனர். 95- வது ஆஸ்கர் விழாவில் விருதை வழங்கவுள்ள தீபிகா படுகோனிற்கு பலரும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்தில் நடைப்பெற்று முடிந்த FIFA உலகக்கோப்பை கால்பந்துப் போட்டிக்கான பரிசுக் கோப்பையை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சிக்கும் தீபிகா படுகோன் அழைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு ஆஸ்கர் விழாவில் ராஜமெளலி இயக்கிய ‘RRR’படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடலும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அப்பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
Source: Dhinasari – Daily Tamil News – Vellithirai News