தேசிய விருதை எனது அப்பாவுக்கு சமர்பிக்கிறேன்: ஸ்ரீகாந்த் தேவா

– Advertisement –

srikanth deva

நான் பெற்ற தேசிய விருதை எனது அப்பாக்கு டெடிகேட் பண்ணுகிறேன் என்று மதுரை விமான நிலையத்தில் தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா பேட்டி அளித்தார்.

டெல்லியில் நடைபெற்ற 69 வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் கருவறை என்னும் குறும்படத்திற்கு இசையமைப்பதற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதைப் இசை அமைப்பாளரும், தேனிசைத் தென்றல் தேவாவின் மகனுமான ஸ்ரீகாந்த் தேவா டெல்லியில் இருந்து, மதுரை விமான நிலையம் வந்தடைந்தார்.

செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது:
இந்த தேசிய விருது குறும்படத்திற்காக வழங்கப்பட்டது.
இந்த விருது வாங்கியதற்கு எங்க அப்பா மிகவும் சந்தோசப்பட்டார். ஜனாதிபதி கையில் இந்த விருது வாங்கியது எனக்கு பெருமையாக உள்ளது.

தமிழனாக இந்த விருது வாங்குவதற்கு பெருமையாக உள்ளது. இந்த விருது யாருக்காக டெடிகேட் பண்றீங்க என நேற்று எல்லோரும் கேட்டார்கள் இந்த விருது எங்க அப்பாவுக்காக அற்பணம் செய்கிறேன்.

எங்க அப்பாவிடம் இல்லாத விருதுகளே இல்லை ஆனால், இந்த விருது அவருக்கு சிறப்பான ஒன்று. நம்ம ரொம்ப ஆடுவோர்க்கு பண்ணனும்னா கண்டிப்பா கடவுள் எல்லாத்தையும் நம்ம கையில கொடுப்பாரு.

எல்லா படத்திற்கும் விருது கிடைக்கும் என்றுதான் உழைக்கிறோம், எல்லா கலைஞர்களும் தேசிய விருது வாங்க வேண்டும் என்பதுதான் கனவு. 20 படங்களுக்கு மேலாக என்னுடைய படம் பெயர் போட்டு விருதுகளுக்கு சென்றுள்ளது. இந்தப் படம் செய்யும்போது விருது கிடைக்கும் என, நினைக்கவில்லை என்றார்.

Source: Dhinasari – Daily Tamil News – Vellithirai News

%d bloggers like this: