விஷால், சசிக்குமார் படங்களை தயாரிக்க வேண்டாம் – பின்னணி என்ன?

vishal

vishal

நடிகர் விஷால் பல தயாரிப்பாளர்களிடம் அட்வான்ஸ் வாங்கிகொண்டு நடித்துக் கொடுக்காமல் டிமிக்கி கொடுத்து வருகிறார். மேலும், சட்டசபை தேர்தலில் போட்டியிடுவது பற்றி யோசித்து வருகிறார். அதேபோல், நடிகர் சசிக்குமார் எம்.ஜி.ஆர் மகன், கொம்பு வச்ச சிங்கம்டா, ராஜவம்சம், பரமகுரு என படங்களில் நடித்து அவை வெளியாகாமல் இருக்கிறது. தற்போது ‘பகைவனுக்கு அருள்வாய்’ என்கிற படத்திலும் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில், விஷால் மற்றும் சசிக்குமார் படங்களை தயாரிப்பதற்கு முன் தங்களிடம் ஆலோசனை செய்யும் படி தயாரிப்பாளர்களுக்கு தயாரிப்பாளர் சங்கம் ரகசிய அறிக்கை அனுப்பியுள்ளதாம். சசிக்குமார் ஏற்கனவே நடித்த படங்கள் ரிலீஸ் ஆன பின்னரும், விஷால் கூறிய படி படம் நடித்து கொடுத்த பின் அவர் படங்களையும் தயாரிக்கலாம் எனவும் கூறியுள்ளனராம்.

Leave a Reply