[prisna-google-website-translator]

கொரோனா தடுப்பூசி 95 சதவீத வெற்றி – அமெரிக்க நிறுவனம் சாதனை

moderna

இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் கொரோனா வைரஸ் மெல்ல மெல்ல பரவ துவங்கியது. அதன்பின் மிகவும் வேகமாக பரவி பலரையும் பாதித்துள்ளது.

உலகம் முழுவதும் இதுவரை 13.24 லட்சம் பேர் கொரோனா நோய்க்கு பலியாகி விட்டனர். மொத்தம் 5 கோடியே 48 லட்சம்  பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 3 கோடியே 81 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.

எனவே, உலகையே அச்சுறுத்தும் கொரோனா நோயை தடுக்க தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் சீனா, ரஷ்யா, அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் களம் இறங்கின.

இந்நிலையில், அமெரிக்க மருந்து நிறுவனமான மாடர்னா கொரோனா நோயை தடுக்கும் தடுப்பூசியில் 95 சதவீத வெற்றியை பெற்றுள்ளது. இதைத்தொடர்ந்து இந்த வருட இறுதியில் அமெரிக்காவில் கொரோனா தடுப்பு மருந்து கிடைக்கும் என அந்த மருந்து நிறுவனம் அறிவித்துள்ளது.

Leave a Reply