வலிமை படத்திற்காக முடி வளர்க்கும் இயக்குனர் – வைரலாகும் வினோத் புகைப்படம்

e0aeb5e0aeb2e0aebfe0aeaee0af88 e0aeaae0ae9fe0aea4e0af8de0aea4e0aebfe0aeb1e0af8de0ae95e0aebee0ae95 e0aeaee0af81e0ae9fe0aebf e0aeb5 - Vellithirai News

சதுரங்க வேட்டை, நேர்கொண்ட பார்வை ஆகிய படங்களை இயக்கியவர் வினோத். தற்போது அஜித்தை வைத்து வலிமை படத்தை இயக்கி வருகிறார்.    இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத் ராமோஜிராஜ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது.

கடந்த 8 மாதங்களாக இப்படத்தின் எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை. இதனால் தல அஜித் ரசிகர்கள் விரக்தி அடைந்துள்ளனர். எனவே, படப்பிடிப்பில் எடுக்கப்படும் புகைப்படங்களையே அப்டேட்டாக கருதி சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இப்படத்தின் இயக்குனர் வினோத் சமீபத்தில் தூத்துக்குடி சென்றார். அவர் நீண்ட முடி வளர்த்துள்ளார். ஒருவேளை வலிமை படத்தின் படப்பிடிப்பு முடிந்தால் மொட்டை அடிக்கிறேன் என வேண்டிக்கொண்டிருக்கிறாரோ என்னவோ தெரியவில்லை.

அவருடன் அஜித் ரசிகர்கள் சிலர் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர தற்போது இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

vinoth

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

15 + five =