தனுஷின் ஜோடி போட கொரோனாவே காரணம் – மாளவிகா மோகனன்

malavika

தமிழ் சினிமாவில் பேட்ட படம் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் மாளவிகா மோகனன். அதன்பின் மாஸ்டர் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார். தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் புதிய படத்திலும் நடிக்க அவர் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

இந்நிலையில், இப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது பற்றி கருத்து தெரிவித்துள்ள அவர் ‘இப்படத்தில் நடிக்க என்னிடம் படக்குழு அணுகிய போது என்னிடம் தேதிகள் இல்லை. ஏனெனில் 3 படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருந்தேன். ஆனால், கொரோனா தொற்று பரவல் காரணமாக அந்த படங்களின் படப்பிடிப்பு அடுத்த வருடத்திற்கு தள்ளிப்போனது. எனவே, தனுஷுடன் நடிக்க வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டேன். எனவே, இதற்கு கொரோனாதான் காரணம்’ என அவர் தெரிவித்துள்ளார்.


Comments

Leave a Reply

%d bloggers like this: